அதிரடியில் ஆரம்பித்து அமைதியில் முடித்தது ஆஸி.

Published By: Vishnu

12 Jun, 2019 | 06:46 PM
image

டேவிட் வோர்னரின் சதத்துடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 307 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

டேவிட் வோர்னர் மற்றும் ஆர்ரோன் பிஞ்ச் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். 

அதனால் அவுஸ்திரேலிய அணி 5 ஓவர்கள் முடிவில் 27 ஓட்டத்தையும், 10 ஓவர்கள் முடிவில் 56 ஓட்டத்தையும் 15 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது.

17 ஆவது ஓவரை எதிர்கொண்ட பிஞ்ச் இரண்டு நான்கு ஓட்டத்தையும், ஒரு ஆறு ஓட்டத்தையும் அடுத்தடுத்து விளாசித் தள்ளினார். இதனிடையே அந்த ஓவரின் 4 ஆவது பந்தில் பிஞ்ச் மொத்தமாக 63 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடக்க, அவுஸ்திரேலிய அணியும் அந்த ஓவரின் முடிவில் 107 ஓட்டங்களை பெற்றது.

எனினும் அவர் 22.1 ஆவது ஓவரில் மொத்தமாக 84 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 82 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வோர்னறுக்கு சற்று நேரம் தோள் கொடுத்தாடி 28.4 ஆவது ஓவரில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (189-2).

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மெக்ஸ்வெல்லுடன் டேவிட் வோர்னர் கைகோர்த்தாட அவுஸ்திரேலிய  அணி 32 ஓவரின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து, 202 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் வோர்னர் 89 ஓட்டத்துடனும், மெக்ஸ்வெல் 4 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தவேளை 33.4 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெறியேறினார். 

இதன் பின்னர் களமிறங்கிய ஷோன் மார்ஸ்ஸுடன் ஜோடி சேர்ந்த வோர்னர் 35.1 ஓவரில் சதத்தை பூர்த்தி செய்ததுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இருந்தபோதும் அவர் 37.5 ஆவது ஓவரில் மொத்தமாக 111 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 107 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (242-4).

தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் சொல்லும்படியாக சோபிக்காத காரணத்தினால் அவுஸ்திரலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது,

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் அமீர் அசத்தலாக 5 விக்கெட்டுக்களையும், சஹீன் அப்ரீடி 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஹப்பீஸ், வஹாப் ரியாஸ் மற்றும் ஹசான் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

photo credit : ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33