3 நாட்களாக தேடப்பட்டு வந்த பெண் வீட்டின் குளியலறையிலிருந்து சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

12 Jun, 2019 | 05:33 PM
image

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த  திங்கட்கிழமை நண்பகல் (10) முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியல் அறையிலிருந்து சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருக்கோவில் விநாயகபுரம் 02  பாடசாலை வீதியைச் சேர்ந்த திருமதி கிருபைராஜா கனகம்மா வயது 53 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திருக்கோவில் விநாயகபுரம் இல - 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள வீட்டில் குறித்த பெண் தனது மகளின் ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை குறித்த பெண் காலை 11.30 மணியளவில்  அயல் வீட்டுக்கு சென்றிருந்த வேளை தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டுக்கு சென்றதாக அயல் வீட்டார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வயல் வேலை முடித்து 12.00 மணியளவில் வீடு திரும்பிய பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா என்பவர் வீட்டு மண்டபத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியை அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என தேடியுள்ளார் ஆனால் மனைவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குடும்பத்தினரும் பெண்ணைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை (12) வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டுக் கிடந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியும், மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான பி.சிவகுமார் மேற்பார்வையில் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரால் தோண்டி எடுக்கப்பட்டதுடன் சடலத்தின் முகத்தில் இரத்த கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடயங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதுடன் திருக்கோவில் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47