(ஆர்.யசி)

ஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும்  நாட்டின் இறைமை தொடர்பில் சஹ்ரான் ஹாசிம் கேள்வியெழுப்பியதுடன், தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதைப் பகிரங்கமாக சஹ்ரான் ஹாசிம் அறிவித்தாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டில் சஹ்ரானும் அவருடைய ஆதவாளர்களும் வாள்கள், மற்றும் கத்திகளுடனும் இருந்த நிலையில் எப்படி இந்தளவு பாரிய ஆயுதங்களைப் பெற்றார்கள்? மிகவும் வறுமையில் இருந்த . சஹ்ரானின் நிதி நிலைமை ஒன்றரை வருடங்களில் எப்படி அவர் இந்தளவு நிதியைப் பெற்று பலமானவரானார் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளதாகவும் அவ் குறிப்பிட்டார். 

ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் சாட்சியமளிக்கையில் இதனை குறிப்பிட்டார்.