(ஆர்.யசி)

காத்தான்குடியில் சஹாரான் ஆட்சியே இடம்பெற்றது. ஐ.எஸ் அமைப்பின் கோடியை ஏந்திக்கொண்டு வன்முறை ரீதியிலான அடிப்படைவாத கொள்கையையே அவர்கள் கையாண்டனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிலருடன் அரசியல் உடன்படிக்கைகளும் செய்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் எனவும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார்.

அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். இவர் வெளியில் இருக்கும் வரையில் பயங்கரவாத அச்சறுத்தல் உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து உண்மைகளை கண்டறிந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை,

நான் மொஹம்மட் அசாத் சாலி, முதலில் இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று உள்ளதா இல்லையா என்று தெரியாத நேரத்தில் இவ்வாறு என்னை  வரவழைத்து காரணிகளை கேட்டுக்கொள்ள தீர்மானம் எடுத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் . எனது வாழ்க்கை வங்கி ஊழியராக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசியல் காலத்தில் குதித்தேன். படிப்படியாக நான் அரசியலில் கால் பதித்து இறுதியாக ஐந்து மாதங்கள் ஆளுநராக கடமையாற்றி இன்று அடிப்படைவாத குற்றத்தில் பதவி விலகியுள்ளேன். நான் ஒரு தீவிரவாதியா அல்லது அடைப்படியாவாதியா என்ற உண்மையை நாளை பிற்பகல் (நேற்று  கூறினார்) பொலிசார் அறிவித்துவிடுவார்கள். 

கேள்வி:- நீங்கள் குறித்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்ததாக கூறினீர்கள், இது குறித்து அறியத்தர முடியுமா?

பதில்:- இந்த நாட்டில் அரசாங்கம் இருக்கின்றதா,  ஜனாதிபதி ஒருவர் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஆட்சிசெய்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். இந்த காலகட்டத்தில் ஐந்து பாதுகப்பு செயலாளர்கள் கடமையில் இருந்தனர். இவர்கள் இந்து பேரிடமும் நாம் எழுத்து மூலமும், சந்தித்தும் அறிக்கையிட்டோம். நான் தனியாகும், ஜம்மியத்துல் உலமா, சிவில் அமைப்புகள் சேர்ந்தும் இவர்களுக்கு முறைப்பாடு செய்தோம். 

கேள்வி:- ஐந்து பாதுகாப்பு செயலாளர்கள் என்றால் எந்த காலத்தில் இருந்து?

பதில்:- கோத்தாபய ராஜபக் ஷ பதவியில் இருந்த காலத்தில் இருந்து. 2010 ஆம் ஆண்டில் இருந்து. அந்த ஆண்டு தான் முஸ்லிம் மக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட காலம். 

கேள்வி:- முதலில் எப்போது?

பதில் :- முஸ்லிம் பள்ளிகள் தாக்கப்பட்டு மக்கள் அடிக்கப்பட்ட காலத்தில் 

கேள்வி:- யாரால் தாக்கப்பட்ட நேரம்?

பதில்:- அதை கோத்தபாய ராஜபக்ஷவிடம் தான் கேட்க வேண்டும். 

கேள்வி:- இல்லை, யார் மூலம் எந்த பள்ளிக்கு தாக்கப்பட்டது ?

பதில்:- சிங்கள பெளத்த பிக்குகள் சிலரின் தலைமைத்துவத்தில் சிங்கள காடையர்களின் மூலமாக தானே தக்கபட்டோம். அப்போது அரசாங்கம் இதனை வேடிக்கை பார்த்ததே தவிர நடவடிக்கை எடுக்கவில்லையே. நாம் இவர்களை சந்தித்து பெயர் பட்டியல்கள் பல கொடுத்தோம். சிங்கள அடிப்படிவாதம் மட்டுமல்ல முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்தும் ஆதாரத்துடன் தெரிவித்தோம். 

கேள்வி:- நீங்கள் ஒரு தகவலை வெளிப்படுத்தும் வேளையில் காலம், சம்பவம் என ஆதாரத்துடன் கூறுங்கள். முதலில் சிங்கள அடிப்படைவாதம் பற்றி கூறினீர்கள் ஆகவே அதிலிருந்து கூறுங்கள்?

பதில்:-சரி, அளுத்கம சம்பவம் நடக்கும் போது ராஜித சேனாரத்தன அவர்களிடம் தொடர்ச்சியாக கூறினேன். அது மட்டும் அல்ல அளுத்கம பொலிஸிலும் முறைப்பாடு செய்தேன். இந்த கூட்டத்தை நடத்த இடமளிக்க வேண்டாம். இது இடம்பெற்றால் தீ வைக்கப்படும். அவ்வாறு நடந்தால் மகிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்புக்கூற வேண்டும் என்ற முறைப்பாட்டை செய்தேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் தான் "அப சரணாய்" என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதில் அனைத்தும் சரியாகிவிடாது. இராணுவம் சென்று வீடுகளுக்கு வெள்ளையடித்து கொடுத்து காயத்தை போக்கிவிட முடியாது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து ஆணைக்குழு அமைப்பதாக கூறினார். இன்றுவரை ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. இந்த தாக்குதல் தான் ஆரம்பம். அடித்தால் கேட்க யாரும் இல்லை, அரசாங்கம் ஒன்றும் செய்யாது என்ற நிலைப்பாடு பரவியது. அதன் பின்னர் திகன, காலி, மினுவாங்கொடை என பரவியது. 21 ஆம் திகதி தாக்குதல் நடத்த முன்னர் பிரபுக்கள் பாதுகாப்பு கடிதம் ஒன்று வந்தது. எனது பாதுகாவலர் கடிதம் ஒன்றினை கொடுத்தனர். அதில் பல பெயர்கள் இருந்தது. அந்த பெயர்கள் தான் நாம் ஆரம்பத்தில் கொடுத்த பெயர்கள். அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் இது குறித்து அறிவித்து பேச வேண்டும் என கூறிய போது அவர் தனியாக வரவில்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் வந்து எம்மை சந்தித்தார். 

கேள்வி:-  ஆரம்பத்தில் இருந்து நீங்கள் செய்த முறைப்பாடுகள் குறித்து தெளிவாக கூறுங்கள், காலம், ஆதாரம் என்ற அடிப்படையில் கூறுங்கள்.

பதில்:- காலம் இப்போது இல்லை, என்னிடம் உள்ளது அணைத்து ஆதாரமும் தருகிறேன். புகைப்படங்கள், அறிக்கைகள் என அனைத்துமே உள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் இதன் குறிப்பிட்டேன். அதுமட்டும் அல்ல 2017 ஆம் ஆண்டு சஹரன் காத்தான்குடியில் 120 வீடுகளுக்கு தீ வைத்தார். இது குறித்து பொலிசில் முறைப்பாடு செய்தும் பொலிசார் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. முடியாத கட்டத்தில் மக்கள் வீதியில் இரங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போதும் பொலிசார் வேடிக்கை தான் பார்த்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து தவ்ஹித் ஜமாஅத் அமைப்பும் பொலிஸாரும் ஒன்றாகவே செயற்பட்டனர். இவை குறித்து நான் பொலிஸ்மா அதிருக்கு தெரிவித்தேன். சஹாரானை சுதந்திரமாக நடமாட்ட விட்டனர். அதுமட்டும் அல்ல, சம்பவம் நடக்க ஒரு வாரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மட்டகளப்பு நிகழ்வு ஒன்றுக்கு வந்தார். அப்போதும் பொலிஸ்மா அதிபரும் இருந்தார். அப்போதும் சஹாரான் குறித்து கேள்வி எழுப்பினேன். ஏன் கைதுசெய்யவில்லை என வினவினேன். ஆனால் அதற்கான உருப்படியான பதில் வரவில்லை. மாவனல்லயில் சில செயற்பாடுகள் உள்ளது. ஏழு பேர் ஜும்மா நடத்துவதாக கூறுகின்றனர். குறைந்தது நாற்பது பேர் இல்லாது ஜும்மா நடத்தப்படாது. இதையெல்லாம் நான் சுட்டிக்காட்டினேன். அதுமட்டும் அல்ல தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கு வந்த பணம் குறித்தெல்லாம் தெரியப்படுத்தினேன். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவ்ஹித் ஜமாஅத் முஸ்லிம் நடைமுறைக்கு எதிராக செயற்பட்டு வந்தனர். அவர்கள் ஒரு அடையாளம் இல்லாது செயற்பட்டனர். அப்துல் ராசிக் என்ற நபர் குறித்து ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது உள்ளது. அவர் பாக்தாதி குறித்து கருத்துக்களை பரப்புகின்றார். நியாயப்படுத்துகின்றார். என்னை கைதுசெய்ய முடியும் என்றால் ஏன் அப்துல் ராசிக் ஏன் கைதுசெய்யப்படவில்லை. அவரை கைதுசெய்ய ஆதாரம் இல்லை என பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார். அப்படியென்றால் இவரை ஏன் பொலிஸ்மா அதிபர் காப்பற்றுகின்றார். ஆனால் அதற்கும் கதை வைத்துள்ளனர். இவர்தான் உளவுத்துறையுள் உள்ளார் என்ற காரணத்தை கூறுகின்றனர் தானே. பக்தாதியை நியாயப்படும் ஒருவர் தீவிரவாதி இல்லையா? இவரை பாதுகாக்க  மேலிடத்தில் உதவிகள் உள்ளது என்பது தெரிவிகின்றது தானே. 

கேள்வி:- நீங்கள் ஆளுநராக இருந்த காலத்தில் எத்தனை தடவைகள் வெளிப்படுத்தினீர்கள்?

பதில்:- ஜனாதிபதிக்கு மூன்று தடவைகள் கூறினேன், பாதுகாப்பு செயலாளருக்கு பல தடவைகள் கூறினேன். சிசிர மென்டிஸ் ஏனைய அதிகாரிகள் அனைவருக்கும் இது தெரியும். சம்பவம் இடம்பெற்ற பின்னர் பூசித ஜெயசுந்தரவை தொடர்புகொண்டு கேட்டேன், நான் கூறியது சரிதானே என கேட்டேன்

கேள்வி:- அவரது பதில் எவ்வாறு இருந்தது?

பதில்:- அவர் ஒன்றும் கூறவில்லை. ராசிக் கூறிய விடயங்கள் என்னிடம் உள்ளது. அவர் பக்தாதியை நியாயப்படுத்துகின்றார். அது மட்டும் அல்ல இந்த அமைப்பின் தலைவர் பி.ஜே. செயனுலாப்தீன் என்பவர் தமிழ் நாட்டில் உள்ளார். இவர் சந்திரிக்கா குமாரந்துக ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வந்தார். இரண்டாம் தடவை வந்து ரண்முத்து ஹோட்டலில் இருந்த காலத்தில் நானும் அளவி மௌலானவும் இவரது செயற்பாடுகளை கண்டித்து இவரை நாட்டை விட்டு வெளியேறினோம். இது 1995 ஆம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் நான்கு தடவைகைகள் இவர் இலங்கைக்கு வருவத நானே தடுத்தேன். இவர் நாட்டுக்கு வந்தால் நாடு தீ பிடிக்கும். இதனை நான் அறிந்துகொண்டேன். இவர் குர்ஆன் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டார். இதன் சிங்கள பிரதியை தான் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கு கொடுத்தனர். இவர்களின் தொடர்புகளை கவனித்துக்கொள்ளுங்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கை எடுத்தார். பிரசாரத்துக்கு வரவில்லை மருத்துவ தேவைக்காக வருவதாக கூறினார். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. இவர்கள்தான் இங்கு அடிப்படைவாதத்தை பரப்பி நாட்டினை நாசமாக்கிய நபர்கள். காத்தான்குடியில் இவர்களை கபிடிக்க சென்ற வேளையில் கூட மில்லியன் கணக்கிலான பணத்தை வழங்கி தம்மை கட்டிக்கொடுக்க வேண்டாம் என்றே அவர்கள் தெரிவித்தனர். 

கேள்வி:- அப்துல் ரசிக என்பவர் சஹரானின் கீழ் செயற்பட்டவர?

பதில்:- தவ்ஹித் ஜமா அத் என்று ஒன்றாகவே இவர்கள் ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு வந்த பணத்தை பங்கிட முடியாது இவர்கள் பிளவுபட்டு இன்று எட்டு -பத்து அமைப்புகளாக மாற்றம் பெற்றுள்ளனர். இதுதான் உண்மையாக நடந்தது. இவர்களின் பள்ளிகளில் பத்துபேர் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அப்துல் ராசிக் எஸ்.எல்.டி.ஜே வில் இருந்து பிளவுபட்டு சி.டி.ஜே ஆக மாற்றம் பெற்றுள்ளது. இவர்கள் தான் பல காரணிகளுக்கு காரணம். 

கேள்வி:- இவர்கள் தீவிரவாத அமைப்பு இல்லையே.  வன்முறை அமைப்பு இல்லை தானே?

பதில்:- இவர்கள் பிரச்சாரங்கள் மூலமாக வன்முறையை தூண்டும் நபர்கள். அடிப்படைவாதத்தை நியாயப்படுத்தும் காணொளிகள் தான் இவர்களின் இணைய பக்கங்களில் பிரசுரிக்கப்படுகின்றது. என்.டி.ஜே இப்போது வெளிவந்த பெயர் தானே. இவர்கள் வன்முறையை கையாண்டதாக இதுவரை பதிவாகவில்லை பிரசாரங்கள் மூலமாக வன்முறையை தூண்டுகின்றனர். 

கேள்வி:-முஸ்லிம் விவகார அமைச்சருக்கு முறைப்பாடு செய்ததாக கூறினீர்கள். எப்போதில் இருந்து?

பதில்:- அமைச்சு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கூறினேன். பிரதமரை நேரடியாக சந்தித்து முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீமை மாற்றுங்கள் என, நல்ல அமைச்சர் ஒருவரை நியமியுகள் என கூறினேன். நூறு நாட்கள் அரசாங்கம் முடிந்தவுடன் இவரை மாற்றுவதாக கூறினார். உண்மையில்  இவரது தம்பி தான் இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் மூல காரணம். தவ்ஹித் ஜமாஅத் இந்த நிலைமைக்கு உருவாக அவரே காரணம். 

அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 02