முதல் பகுதி  அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 01

கேள்வி:- அசாத் சாலி அவர்களே நீங்கள் முன்வைப்பது பாரதூரமான குற்றச்சாட்டு?

பதில்:- ஆம் அது தெரியும். அதனால் தான் நான் குற்றம் சுமத்துகிறேன். நான் பல தடவைகைகள் கூறியுள்ளேன்.

கேள்வி:- அவர் பெயர் என்ன?

பதில்:- அமைச்சர் ஹலீமின் தம்பி பாஹிம். 

கேள்வி:- தம்பி தீவிரவாதி என்பதற்காக அண்ணன் பொறுப்பேற்க வேண்டுமா?

பதில்:- தீவிரவாதி என கூறவில்லை, இவர்தான் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பை பதிவுசெய்து இயங்க நடவடிக்கை எடுத்தார். அண்ணன் அப்பாவி ஒருவர்  தான். 

கேள்வி:- நீங்கள் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது 2013-14 ஆம் ஆண்டுகால சம்பவங்கள் குறித்தா பேசினீர்கள்?

பதில்:- இல்லை தவ்ஹித் ஜமா அத் தொடர்பில்.

கேள்வி:- நான் நான் கேட்பது என்னவென்றால் கடந்த கால முறைப்பாடுகள் குறித்து என்ன நடந்தது?

பதில்:- அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை, முறைப்பாடு செய்தும் பலனில்லை. தவ்ஹித் ஜமாஅத்தும் பொலிசாரும் ஒன்றாக செயற்பட்டனர். என்ன முறைப்பாடு செய்தும் எம்மால் ஒன்றுமே செய்ய முடியாது போய்விட்டது. 

கேள்வி:- காத்தான்குடி பொலிசாரால் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது சஹாரான் தேடப்பட்டு வந்தார் தானே?

பதில்:- அவர்கள் தான் ஒன்றும் செய்யவில்லையே, சஹாரானை பிடிக்க நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரியை இடம்மாற்றம் செய்தனர் தானே. அதன் பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவும் தானே சில சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஐ. எஸ் கோடியை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அப்பிரதேச மக்களை வெட்டிப்போட்டனர். ஆரம்பத்தில் இருந்து நாம் தெரிவித்தோம். சஹாரான் எங்கிருந்து செயற்பட்டார், அவருக்கு எவ்வாறு பணம் வந்தது என்ற காரணிகள் கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்காது. 

கேள்வி:- சஹாரான் போன்று வேறு யாரும் உள்ளனரா?

பதில்:- ஆம் உள்ளனர். அவற்றை கூற எமக்கு வேறு இடம் இல்லை. ஆனால் இப்போது இந்த இடத்தில் என்னால் கூற முடியாது. 

தெரிவுக்குழு:- இங்கு கூற வேண்டாம். தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து தனியாக எம்மிடம் கூறுங்கள். கூடகங்கள் முன்னிலையில் கூற வேண்டாம். 

கேள்வி:- 2014 ஆம் ஆண்டில் தான் சஹாரான் குறித்து முதலில் தகவல் வந்தது. இது குறித்து ப அறிக்கைகள் உள்ளது. அப்போதுவரை எமது புலனாய்வு துறைமூலம் பணம் வழங்கிய 26 நபர்களில் சஹாரானும் ஒருவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பதில்:- அப்போது அவரது பெயரை அறிந்திருக்க வில்லை. எஸ்.எல்.டி.ஜே மற்றும் ராசிக் என்ற நபருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தெரியும். 

தெரிவுக்குழு:- இல்லை அப்போது இது குறித்து தகவல் வந்தது, இணையதளம் ஒன்றில் இது பிரசுரிக்கப்பட்டது. உடனே பாதுகாப்பு செயலாளர் குறித்த இணையதள உரிமையாளரை திட்டி இந்த செய்தியை நீக்க வலியுறுத்தினார். இதில் சஹாரானும் இருந்தார். அதுமட்டும் அல்ல சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்புகளும் இருந்தது. இது தான் காத்தான்குடியும் பொலிசாரும் அவருக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது போனமைக்கு காரணமாகும். அதுமட்டும் அல்ல ஆரம்பத்தில் இருந்து இவருக்கு எதிராக முஸ்லிம் மக்களே எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிங்களவர்கள் அல்ல. எமது பாதுகாப்பு செயலாளரும், அதிகாரிகளும் தெரிந்தோ தெரியாமலோ இவர்களை பாதுகாத்தனர். 

ஆசாத் சாலி:-ஆம், அதுமட்டும் அல்ல காத்தான்குடியில் ஐ. எஸ் கொடியுடன் இவர்கள் ஊர்வலம் சென்றபோது எங்கே போனது எமது பிளனாய்வு பிரிவும், பொலிசும். இவற்றை ஏன் தடுக்கவில்லை.

கேள்வி:- இவ்வாறு ஊர்வலம் போகையில் அதனை தடுக்க பொலிசாருக்கு முடியாமல் போனமைக்கு எனறதும் பின்னுந்துதல் இருக்கும் என நினைகிறீர்களா?

பதில்:- இன்று அப்துல் ராசிக்கை கைதுசெய்ய வேண்டாம் என எவரேனும் கூறுகின்றனர் என்றால் அவர்கள் தான் அன்றும் சஹாரானை பாதுகாத்தனர் என்பது தெளிவாக தெரிகின்றது. 

கேள்வி:- யார் அது?

பதில்:- நீங்கள் தான் இதனை தேடவேண்டும். 

கேள்வி:- நீங்கள் இந்த காரணிகளை உறுதியாக கூறுகின்றீர்கள் என்றால் அதனை தெளிவாகவும் உறுதியாகவும் கூறுங்கள், நீங்கள் அரச அதிகாரி அல்ல, நீங்கள் சுதந்திரமாக உங்களின் கருத்துக்களை கூற வேண்டும்,

பதில்:- இல்லை. நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு மட்டும் தானே பதில் கூற வேண்டும் என வலியுறுத்துகின்றீர்கள். என்னை எங்கே பேச விடுகிறீர்கள். 

கேள்வி:- இல்லை, கேள்விக்கு தொடர்பான பதிலை நீங்கள் கூறலாம். ஒரு முறைப்படி கூறுங்கள், அப்போதுதான் எமக்கும் அறிக்கையை உருவாக்க முடியும். ஆகவே தெளிவாக கூறுங்கள். சரி ரசிக என்பவர் குறித்து கூறப்படுகின்றது அவர் இருக்கிறது எங்கே என்று தெரியுமா?

பதில்:- இருக்கிறார் தானே 

கேள்வி:- இருக்கின்றார் என்று எங்களுக்கும் தெரியும். உலகத்தில் எங்கேயோ இருக்கிறார், எங்கு இருக்கிறார் என்று தெரியுமா என்றுதான் கேட்கிறோம்?

பதில்:- பொலிசுடன் தான் இருக்கின்றார். கொழும்பில் பொலிசுடன் தான் உள்ளார். 

கேள்வி:- அப்படியென்றால் அவர் இருப்பது தெரிந்தும் பிடிக்காமல் உள்ளனர் என்றார் நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில்:- அதை தானே நான் இவ்வளவு நேரமாக கூருகிறேன். நான் பதவி விலக மூன்று நாட்களுக்கு முன்னரும் நான் ஜனாதிபதிக்கு இது குறித்து தெரிவித்தேன். அப்போது அவர்களுக்குள் என்னனமோ பேசிக்கொண்டனர். அத்துடன் முடிந்துவிட்டது. அவர்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். நான் கேட்பது என்னவென்றால் நான் கொடுத்த ஆதாரங்கள் உண்மையில் போதாதா அவரை கைதுசெய்ய. பக்தாதியின் செயற்பாடுகள் நியாயமானது, அவர்தான் சரியான தலைவர், அவரை பார்க்கும் போதே உடல் புல்லரிக்கின்றது என்று கூறுகின்றார் என்றால் அதனைவிட வேறு என்ன ஆதாரம் தேவைப்படுகின்றது. 

கேள்வி:- ஏனைய மதத்தவரை கொள்ள வேண்டும் என ராசிக் கூறுகின்றாரா?

பதில்:- எனக்கு கிடைத்த வீடியோ பதிவில் அவை இல்லை, பக்தாதி சிறந்த தலைவர், அவர் செய்வது சரி என்று கூறுகின்றார் என்றால் பதங்கரவாதம் சரி என்று கூறுவதாக தானே அர்த்தப்படும். என்னை ஏன் கைது செய்தனர், எதிர்வுகூறிய காரணத்தினால் தானே என்னை கைது செய்தனர். அமைச்சர்களுக்கு கூட என்னை பார்க்க முடியாத நிலைமை இருந்தது. கடுமையான சட்டத்தில் என்னை சிறையில் அடைத்தனர். இவளவு ஆதாரம் இருக்கும் ஒருவரை ஏன் கைதுசெய்ய முடியவில்லை. 

கேள்வி:- உங்களை எப்போது கைது செய்தனர்?

பதில்:- என்னை கோத்தபாய ராஜபக் ஷ செயலாளர் காலத்தில் தானே கைது செய்தனர். 2013ஆம் ஆண்டு. 

கேள்வி:- அந்த காலத்தில் சஹாரான் குறித்து தெரிவிக்கப்பட்டதா?

பதில்:- அவர் தானே அதிகமாக சஹாரானை பயன்படுத்தினார். அவரது வழிநடத்தலில் தானே இவர்கள் அனைவரும் இயங்கினர். 

கேள்வி:- அவர் என்றால் யாரை கூறுகின்றீர்கள்?

பதில்:- கோத்தாபய ராஜபக் ஷ எஸ்.எல்.டி.ஜேவுடன் நெருக்கமாக செயற்பட்டார். சாலே என்ற இராணுவ அதிகாரி மிகவும் நெருக்கமாக செயற்பட்டார். அவர்தான் என்னை கைதுசெய்து என்னை அமைச்சர்கள் கூட பார்க்க முடியாத நிலையில் புலனாய்வு அதிகாரிகள் என்னை சந்தித்தனர். ஏன் என்னை சந்தித்தனர்? 500 மில்லியன் ரூபாய்கள் எனக்கு பேரம்பேச வந்தனர் . இதையெல்லாம் கூற நான் அச்சப்படவில்லை. 500 மில்லியனை எனக்கு பெற்றுக்கொள்ள சொன்னார்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கூறினார்கள். 

கேள்வி:- யார் கூறியது?

பதில் :- ஆமியில் சாலே 

கேள்வி:- சலேவை அனுப்பி என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 500 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளுங்கள், நாட்டினை விட்டு வெளியேறுங்கள், அவ்வாறு இல்லாது அரசியல் செய்வது என்றால் இவற்றில் 300 மில்லியனை வைத்துக்கொண்டு 200 மில்லியனை தேர்தலுக்கு செலவழியுங்கள் என்றார். இப்படித்தான் எமக்கு பெரம்பேசப்பட்டது. நான் இதனை ஏற்றுகொள்ளவில்லை. 

கேள்வி:- இது குறித்து முறைப்பாடு செய்யவில்லையா?

பதில்:- யாரிடம் சென்று முடியிட முடியும், அந்த அரசாங்கம் இருந்த காலத்தில் முடியிட முடியுமா? வெள்ளைவான் வரும். 

கேள்வி:- நீங்கள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என கூறினார்கள்?

பதில்:- ஒன்று செய்யவேண்டாம் என்று கூறினார்கள். அவர்களின் குற்றங்களை வெளிபடுதாது இருக்கவே என்னை அமைதியாக இருக்க கூறினார். 

கேள்வி:- உங்களின் வெளிப்படுத்தலை மோடி வரைக்கவே இந்த பேசம்பேசலா?

பதில்:- ஆம் அதற்காகத்தான். நான் ஒவ்வொரு நாளும் ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்தினேன். எனது தாயார் இறந்து மூன்று நாட்களில் என்னை கைது செய்தனர். எனது குடும்ப உறுப்பினர்களுக்கு கூட என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன், ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற காரனத்தினால? என்மீது ஏதாவது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் உள்ளதா? ஒன்றும் இல்லை. 

கேள்வி:- எத்தனை நாட்கள் சிறையில் இருந்தீர்கள்?

பதில்:- எட்டு நாட்கள் 

கேள்வி:- இது குறித்து நீதிமன்ற வழக்கு தொடர்ந்தீர்களா?

பதில்:- ஹஹா, நான் நீதிமன்றம் சென்றால் எனது எனது வழக்கை எடுத்துகொள்ளவே இல்லையே. என்னை கைதுசெய்து நீதிமன்றத்தில் கூட ஒப்படைக்கவில்லை. இன்றுவரை வழக்கு இல்லை. அப்போது அவ்வாறு தான் நடந்துகொண்டனர். 

கேள்வி:- எஸ்.எல்.டி.ஜே ஆதரவாளர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்?

பதில்:- இலங்கையில் மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் குறைவான உறுப்பினர்கள் இருப்பார்கள். 

கேள்வி:- இலங்கையில் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் ஒரு இலட்சம் பேர் மாற்று கொள்கை என்றால் ஏனையவர்கள் எதுவும் செய்யவில்லையா?

பதில்:- நாம் முடையிட்டால் எம்மை தானே சிறையில் அடைத்தனர். அவர்களை ஒன்றும் செய்யவில்லையே. மாவனல்லையில் ஏழு பேர் மட்டும் ஜும்மா நடத்துவதாக கூறியபோது முடியிட்ட ஒரு அப்பாவி பெண்ணை அல்லவா சிறையில் அடைத்தனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார், இன்று மட்டும் அல்ல அடுத்த வாரமும் இவர்களுக்கு நாம் பாதுகாப்பு கொடுப்போம் என்றார். மட்டகளப்பில் இருந்து பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் முடியாது என வலியுறுத்தினார்.அந்தளவு நெருக்கமாக பொலிசாரும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்புன் நெருக்கமாக செயற்பட்டது. 

கேள்வி:- இவ்வாறு நீங்கள் செயற்பட்ட காரணங்களுக்காக உங்களுக்கு எதிராக எந்த அழுத்தமும் வரவில்லையா?

பதில்:- என்னை தானே அதிகமாக விமர்சித்தனர். அதுமட்டும் அல்ல நான் கூறுவது சற்று செவிமடுங்கள். சஹாரைன் அடிபப்டைவாதம் பரவிய காலத்தில் பலர் அவருடன் இருந்து விலகியுள்ளார். ஆனால் இப்ராஹிம் ஹாஜியாரின் மகன் தற்கொலை தாரியாக மாறினார் அல்லவா. அவர் சஹாரானுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திய காலத்தில் அவரது அண்ணன் இவர் குறித்து கண்காணித்து வந்துள்ளார். வீட்டில் சண்டையும் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து தம்பி அண்ணனுக்கு கூறுகின்றார் " அண்ணா உங்களுக்கு சஹாரானை பற்றி தெரியாது, வந்து ஒருமுறை பேசுங்கள்" என்று கூறி அண்ணனை அழைத்து செல்கின்றார். பொய் சந்தித்து வரும்போது அண்ணனும் பயங்கரவாதி ஆகிவிட்டார் தானே. அந்தளவுக்கு மூளை சலவி செய்யப்படுகின்றது. இதனை தான் நான் கூற முயற்சிக்கின்றேன். இதற்காக இவர்கள் கூறும் நியாயம் என்ன? தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர், இதனை தடுக்க யாரும் இல்லை. அதனால் தான் நாம் இவ்வாறு செய்கின்றோம் என்கின்றனர். இன்றும் அதுதான் நடக்கின்றது. முஸ்லிம் மக்களை பயங்கரவாதியாக்குகின்றனர். ஒரு துளியளவு தொடர்பி உள்ள முஸ்லிம் நபரை விடுதலை செய்ய நாம் ஒருபோதும் கூறவில்லை. அவர்களை கொன்று போட்டால் கூட எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இன்று மக்கள் படும் வேதனையை பார்த்து எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. முஸ்லிம் மக்களை இவ்வாறான ஒரு நிலைமைக்கு மாற்றுவீர்கள் என நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. 

கேள்வி:- நீங்கள் என்றால் யாரை கூறுகிறீர்கள்?

பதில்:- அரசாங்கம், அரசாங்கம். அரசாங்கமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். ஒரு நிமிடம் நான் சொல்வதற்கு இடமளிக்க வேண்டும், இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நாமே குரல் கொடுத்தோம். அரசாங்கம் அல்ல, பொலிசார் அல்ல, நாம் தான் துப்புக் கொடுத்தோம். இறுதியாக எம்மையே பயங்கரவாதி என்று கூறுகிறீர்கள். 70 வயது முஸ்லிம் நபர் ஒருவர் பயணிக்கும் போது அவரை சோதனை செய்கின்றீர்கள், பையில் இரு தமிழ் நாளிதழ் இருந்தது. அதில் சஹாரானின் புகைப்படம் இருந்ததற்காக அவரை கைது செய்தீர்கள். பாவம் அவர். 

சரத் பொன்சேகா :- நியாயமான விடயம் தானே, கைது செய்து விசாரணை நடத்தப்பட்டிருக்குமாக இருக்கும், 

சாலி:- விசாரணை நடத்துவதா, அப்படியென்றால் முதலில் பத்திரிகை நிறுவனத்தை மூட வேண்டும். ஏன் அவரை கைது செய்ய வேண்டும். நாட்டில் வெளிவரும் பத்திரிகையில் தானே அது உள்ளது. உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்திலும் சஹாரான் சத்தியப்பிரமாணம்  புகைப்படத்தை சஹாரானை அனுப்புவைத்தார். எவ்வாறு அவை வந்தது? சமூக தளங்களில் தானே வந்தது, உங்கள் அனைவரது தொலைபேசிகளிலும் இது இருக்கும். அனைவரும் ஷையார் செய்தனர். அவர் எங்கு சத்தியப்பிரமாணம் செய்தார், கொல்பிட்டி லகி பிளாசா கட்டடத்தில் தான் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். மக்கள் தான் இவற்றை ஊடகங்களுக்கு கொடுத்தனர். இன்று சிறையில் உள்ள பிள்ளைகளை பாருங்கள், தொலைபேசிகளை விசாரித்து சஹாரானின் காணொளி இருந்த காரணத்தினால் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள். நோன்பு காலத்தில் இந்த பாவத்தை செய்துள்ளீர்கள். இந்த சாபம் யாருக்கு வரும். பயங்கரவாதி ஒருவனும் எமக்கு வேண்டாம் ஆனால் அப்பாவிகள் ஏன் தண்டிக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்ல, மல்வானையில் நோன்பு காலத்தில் பள்ளிவாசல் மூடப்படும். அங்கு சென்று கற்பிக்கும் மூன்று இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விசாரணைக்கு அழைத்து மூன்றாம் நாள் கைது செய்து கையை கட்டி நின்றவாறே 15 நாட்கள் வைக்கப்பட்டனர். அப்படி நடத்தினால் இவர்கள் பயங்கரவாதியாக மாறுவார்களா இல்லையா?ஏன் குர்ஆன் வீசப்பட்டது. ஏன் மிதிக்கப்பட்டது. ஏன் குர்ஆன் அவமதிக்கப்பட்டது. 

கேள்வி:- நீங்கள் கூறுவதை பார்த்தால் எவரையும் கைதுசெய்ய முடியாதே?

பதில் :- பொய் கூறிக்கொண்டு எம்மை அடக்கவேண்டாம். 

கேள்வி:- நீங்கள் இலங்கை கொள்கையை ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

பதில்:- ஆம், நிச்சயமாக 

கேள்வி:- "இலங்கையில் சிறுபான்மை என்றாலும் உலகத்தில் பெரும்பான்மை இனம் நாங்கள், ஆகவே யாருக்கும் நாம்  கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை" இவ்வாறான கருத்துக்களுக்கு நீங்கள் ஆதரவா?

பதில்:- யார் இவ்வாறு கூறியது?

கேள்வி:- ஹிஸ்புல்லாஹ் 

பதில்:- இதனை நான் அப்போதே மறுத்தேன். இந்த நேரத்தில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைப்பது தவறு. அவருக்கும் கோவம் முரண்பாடுகள் இருக்கும் தானே, அவர் கஷ்டப்பட்டு வெளிநாடு சென்று நிதிகளை திரட்டி இங்கு பல்கலைக்கழகம் அமைத்து இறுதியில் அதனை மூட வேண்டும் என தேரர்கள் கூறிவருகின்ற நிலையில் அவருக்கும் கோவம் வரும் தானே. இப்போது பாருங்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஷரியா பல்கலைக்கழகம் என கூறுகின்றனர். அது அவ்வாறு அல்ல. ஒரு பாடமாக ஷரியா உள்ளது. எவ்வாறு இருப்பினும் இதனை உயர்கல்வி அமைச்சு தானே கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமா ரதன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? தலதா மாளிகை முன்னிலையில் ஏன் அவ்வாறு உண்ணாவிரதம் இருந்தார். இது பெளத்த சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடு. பாருங்கள் அவர் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு வைத்தியசாலை சென்று பின்னர் அவர் தேரர்களுடன் கூறிய கருத்துக்கள் " யு.என்.பியையும் சீரழித்து விட்டேன், ஸ்ரீலங்காவையும் சீரழித்து விட்டேன், இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரானால் சரி' என கூறுகின்றார். அந்த காணொளி என்னிடம் உள்ளது. பிரச்சினையை உருவாக்கிவிட்டு இவர்கள் எதிர்பார்ப்பது என்ன. தாக்குதாளின் பின்னர் இடம்பெற்ற கலவரங்களில் எல்லாம் தாமரை கட்சியின் பிரதான நபர்கள் உள்ளனர். அவர்களை ஏன் இன்றுவரை கைதுசெய்யவில்லை. 

முஸ்லிம் மக்களை சந்தேகத்தில் கைது செய்கின்றீர்கள், பள்ளிவாசல் பல தடவைகைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. நாய்களை கொண்டுவர வேண்டாம் என நான் கூறவில்லை. முடிந்தால் காலனியை கழட்டிவிட்டு செல்லுங்கள். முடியவில்லை என்றால் பரவாயில்லை. நாய்களை கொண்டுவருவது என்றால் முதலில் எங்களிடம் கூறிவிடுங்கள். நாங்கள் சரியான சூழல் ஒன்றை உருவாக்கிக் கொடுகின்றோம். ஏனெனால் எமக்கும் நாய்க்கும் ஒத்துவராது. மத ரீதியில் இது சரியில்லை. அதற்கும் எம்மை விமர்சிக்கிறீர்கள். குருபானுக்கான கொண்டுவந்த கத்திகளையும் வீட்டில் உள்ள மீன் விட்டும் கத்தியை சிறிய கத்தியை வைத்துக்கொண்டு எம்மை விமர்சிக்கிநீர்கள். இன்று வீடுகளில் உள்ள எமது பெண்கள் பாண் ராதல் ஒன்றை வெட்டக்கூட கடைக்கு சென்று கொடுக்கின்றராம். வீட்டில் கத்தி இல்லையாம். எமக்கு ஒரு பெயர் உள்ளது ' மா ரக லே" அப்படிப்பட்ட எம்மை ஏன் இவ்வாறு நடத்துகின்றீர்கள்.

சரத் பொன்சேகா:- ஆசாத் சாலி அவர்களே, அப்போதைய சூழல் மிகவும் பயங்கரமான சூழல். அந்த நேர்தல் இராணுவம் அவ்வாறு தான் நடந்துகொள்ளும். அவர்களுக்கு நிலைமைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அவர்களை குறைகூற முடியாது. உங்களுக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ள முடியாது. இந்த சூழலில் உருவாக்கிய நபர்கள் இராணுவத்தை விரல் நீட்ட வேண்டாம். இதனை உருவாக்கிய நபர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

சாலி:- இதில் மக்கள் இராணுவத்திடம் எதிர்பார்ப்பது நேர்மையான செயற்பாட்டை. தேடுதல் நடத்த முடியும். குர்ஆனை வீசக்கூடாது, காலால் மிதிக்கக்கூடாது, வீட்டின் பொருட்களை இழுத்தேரிய கூடாது. இவற்றை எல்லாம் செய்ய ஒரு வழிமுறை உள்ளது. அதனைத்தான் கையாள வேண்டும். 

சரத் பொன்சேகா:- சாலி, இந்த காரணிகள் ஒரு சம்பவம் தானே. இது நடந்ததா இல்லையா என எமக்கு தெரியாது. ஒருவர் இருவர் கூறியதற்காக முழு இராணுவத்தையும் குறை செய்ய வேண்டாம். இராணுவம் என்பது பொலிஸ் மாதிரி அமைதியாக இருக்காது. இராணுவம் சென்றால் மக்களுக்கு நெருக்கடி வரும். அது தான் வழமை. அவர்கள் கெஞ்சி கொஞ்சி தேட மாட்டார்கள். உங்களின் கடமை இராணுவத்திற்கு இடமளிப்பது. அதனை விளங்கிக்கொள்ள வேண்டம். 

சாலி:- நான் அவ்வாறு கூறவில்லை. எட்டுபேர் கொண்ட ஒரு சிறிய குழு செய்த தவறுக்காக ஏன் ஒட்டுமொத்த மக்களையும் அந்த பக்கமே தள்ளிவிட பார்கிறீர்கள் என்றே நான் கேட்கிறேன்?

சரத் பொன்சேகா:- எட்டுப்பேர் செய்ததாக இருந்தாலும் 250 பேர் இறந்தார்கள் தானே. 500 பேருக்கு காயம் ஏற்பட்டதே. எட்டுபேர் செய்த வேலைதானே இது. 

சாலி :- எல்.ரி.ரி.இ காலத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் புலிகளுடன் இருக்கவில்லையே, ஏன்? நாங்கள் நாட்டுக்காக இராணுவத்துடன் இருந்தோம். 

தெரிவுக்குழு:- சரி சரி இப்போது கேள்விக்கு வருவோம், உரிய காரணி என்னவோ அதனை பேசுவோம். சாட்சியங்கள் இருப்பின் அவற்றை காட்டுங்கள். இந்த சாட்சிகளில் ஹிஸ்புல்லாஹ்வுடன் சஹாரான் உள்ள புகைப்படங்கள் உள்ளதே?

பதில்:- கிழக்கு தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடன் சஹரன் உடன்படிக்கை ஒன்றினை செய்துகொண்டார். அதற்கமைய சகல் கட்சிகளும் அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அமீர் அலியும் அளிக்கப்பட்டார். அப்போது அமீர் அலி கூறியது என்னவென்றால், நீங்கள் எவ்வாறு அனைவருடனும் செயற்பட முடியும். அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள் எனது அரசியல் மேடையில் ஏறி எனக்கு வாக்களிக்க கூறுங்கள் நான் உங்களுடன் ஒப்பந்தம் செய்கின்றேன் என்றார். அதன் பின்னர் சஹாரன் ஹிஸ்புல்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். சஹாரானுக்கு மக்கள் ஆதரவு இல்லை, ஆனால் இவர் காத்தான்குடியை நிருவகிக்கும் முறைமை மக்கள் அச்சத்தில் இருந்தனர். அதனால் தான் இவர்களும் அஞ்சி உடன்படிக்கை செய்தனர். 

கேள்வி:- நிருவாகம் என்றால்? சஹாரான் காத்தான்குடியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரா?

பதில்:- ஆம், அதனால் தானே மக்கள் அஞ்சி பொலிசுக்கு கூட செல்லாத நிலைமை இருந்தது. பெண்கள் வெளியில் வரவே மாட்டார்கள். வெட்டும் குத்தும் தானே இடம்பெற்றது. அதுமட்டுமா அந்த இரண்டு போலிசார் எவ்வளவு மோசமாக கொல்லப்பட்டனர் என்பது தெரியும் தானே. நாங்கள் விடுதலைப்புலிகள் என நினைத்துகொண்டுள்ளோம். 

கேள்வி:- அப்படியென்றால் சஹாரான் ஹிஸ்புல்லாஹ்விற்கு தேர்தலில் உதவி செய்தாரா?

பதில்:- ஆம், அதனால் தான் உடன்படிக்கை செய்துகொண்டார். இதில் பிரதானமானது, பட்டாஸ் வெடிக்க முடியாது, ஒலிபெருக்கி போடா முடியாது போன்ற உடன்படிக்கைகள். 

கேள்வி:- உடன்படிக்கை செய்த அனைவருக்கும் இந்த கோரிக்கையா விடப்பட்டது?

பதில்:- ஆம், இதில் அப்துல் ரஹ்மானின் என்.எப்.ஜி.ஜே, வேறு சில கட்சிகள் இருந்தன. 

கேள்வி:- முஸ்லிம்கள் தற்கொலை செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

பதில்:-இல்லை, ஹராம் எமக்கு அதனால் தானே இவர்களை எமது மயானங்களில் அடக்கம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை. 

கேள்வி:- ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டில் இருந்து பணம் கொண்டுவந்ததாக கூறினீர்கள், உங்களுக்கு இது தெரியுமா?

பதில்:- ஆம், சவுதியில் இருந்து.

கேள்வி:- அரசாங்கம் ஊடாகவா?

பதில்:- இல்லை, நிதி உதவி ஒன்று என நினைகின்றேன். 

கேள்வி:- என்ன நிதி உதவி?

பதில்:- அது தெரியாது. 

ஆசு மாரசிங்க :- தெரியாத விடயங்களை கூறாதீர்கள். உங்களுக்கு தெரியாவிட்டால் ஏன் கூறுகின்றீர்கள். சாட்சி வழங்க வந்தால் அதனை மட்டும் செய்யுங்கள். 

பதில்:- நீங்கள் தானே இதனை கண்டறிய வேண்டும். இவ்வளவு பணம் வருகின்றது என்றால் அது எவ்வாறு வருகின்றது என்று தேடி பார்க்க வேண்டும் தானே . 

ஆசு மாரசிங்க :- இல்லை, நீங்கள் ஒரு முன்னாள் ஆளுநர் என்ற ரீதியில் சாட்சிக்கு வந்துலீர்கள். ஆகவே அதனை கருத்தில் கொள்ளுங்கள். இந்த பணம் முடியற்ற பணம் என நாம் கண்டறிந்துள்ளோம். ஆகவே கவனமாக பேசுங்கள். இது சஹாரியா இல்லை என நீங்கள் எவ்வாறு கூற முடியும். 

சாலி:- ஷரியா எமது வாழ்க்கை. நீங்கள் அதனை சரியாக விளங்கிக்கொள்ளுங்கள். 21 ஆம் திகதி தாக்குதலுக்கும் முஸ்லிம் விவாகத்திற்கும் என்ன சம்பந்தம். ஏன் அதனை தொடர்புபடுத்த பார்கின்றீர்கள். 

ஆசு மாரங்க:- ஷரியா சட்டம் இந்த நாட்டுக்கு அவசியமா?

சாலி :- உங்களுக்கு அவசியமில்லை, எமக்கு அவசியம், நாம் ஷரியாவிற்கு அமையவே வழிநடத்தப்படுகின்றோம். ஷரியா அடிப்படைவாதம் அல்ல. இது எமது வாழ்க்கை. எமது வாழ்வில் அனைத்திலும் ஷரியா உள்ளது. 

ஆசு மாரசிங்க :- ஏன் நாட்டுக்கு பல சட்டம் வேண்டும்?

சாலி :- இது இன்று நேற்று வந்தது அல்ல. வேறு சம்பவங்களை வைத்துக்கொண்டு நீங்கள் எங்களை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சிகின்றீர்கள். இதனை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. 

கேள்வி:- ரசிக்  வெளியில் இருப்பது இன்னமும் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்றா நீங்கள் கூற வாறீர்கள்?

பதில்:- வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. என்ன செய்ய வேண்டுமோ அது இன்றுவரை நடைபெறவில்லை. 

கேள்வி:- அப்துக் ரசிக பயங்கரவாத செயற்பாடுகலில் ஈடுபடவில்லையே. அவர் அடிப்படைவாத செயற்பாடுகளில் தானே உள்ளார், என்.டி.ஜே வை அவரை ஆதரிக்கவில்லை தானே?

பதில்:- ஆம். ஆனால் அவர் ஐ. எஸ் அமைப்பை ஆதரிக்கின்றார் தானே. 

சரத் பொன்சேகா:- ஐ. எஸ்அமைப்பை அவர் ஆதரிக்கிறார் என்றால் அவர் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றார் என்று தானே அர்த்தம். அப்படியென்றால் அவர் பயங்கரவாத பக்கமே உள்ளார் என்று தான் அர்த்தம். 

ராஜித :- அமிர்தலிங்கம் அவர்கள் 1976 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழம் வேண்டும் என கூறி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் கூட இருந்தார். இவை கருத்துக்கள் மட்டும் தான்.