அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள இலங்கை அகதியின் பரிதாப வேண்டுகோள்

Published By: Rajeeban

12 Jun, 2019 | 04:29 PM
image

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின்  குடிவரவு தீர்ப்பாயத்திற்கு  அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக உளநல பாதிப்பிற்கு உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரவியராஜா சுப்பிரமணியம் 2013 முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது மனஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தனது சகோதரர் அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என லண்டனில் வசிக்கும் சுப்பிரமணியத்தின் சகோதரி  சுசீலா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் ஒரு அகதியென அவர் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் மோசமடைந்து வரும் மனோநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரது எதிர்காலம் குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36