அமைச்சின் வரப்பிரசாதங்களை ரிஷாத் பதியுதீன் அடிப்படைவாத்திற்கு பயன்படுத்தியுள்ளார் : விமல் வீரவன்ச 

Published By: R. Kalaichelvan

12 Jun, 2019 | 04:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சதொச நிறுவனத்தின் வாகனங்கள் அடிப்படைவாதிகளின் தேவைகளுக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமான  நீதிமன்றில்  பகிரங்கப்படுத்த  தயார். 

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சின் வரப்பிரசாதங்கள்  முழுமையாக  அடிப்படைவாத  வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன்  லங்கா சதொச நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக முன்னர் ஒருபோதும்  சதொச நிறுவனத்தில் இருந்து  போதைப்பொருட்கள் கைப்பற்றப்படவில்லை, இஸ்லாமிய அடிப்படைவாதமும்,  போதைப்பொருள் விற்பனையும்  வேறல்ல இரண்டும்.

சசொத நிறுவனம்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட முன்னர்  சதொச நிறுவனத்தில் பாரியளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.  அடிப்படைவாத தேவைகளுக்கு  அரச   நிறுவனத்தின் வாகனங்களும்  முறைக்கேடாக பயன்படுத்தப்படவில்லை.  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முறையற்ற செயற்பாடுகளே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை   வலுப்படுத்தியுள்ளது.

சதொச நிறுவனத்தில் முறைகேடுகள் இடம் பெறுகின்றது என்று   கடந்த காலங்களில்   ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுக்களை  முன்வைத்த போது  அமைதி காத்   சதொச நிறுவனம் தற்போது  எமக்கு எதிராக  வழக்கு தாக்கல்  செய்யவுள்ளமை விசேட அம்சமாகும். ஏப்ரல் மாதம் 21ம் திகதி அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கும், அதற்கு முற்பட்ட  தினங்களில் அடிப்படைவாதிகளின் ஏனைய செயற்பாடுகளுக்கு சசொத  நிறுவனத்தின் வாகனங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரச வாகனங்கள்  முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில்  நாம் பகிரங்கப்படுத்திய   செய்தியினால் சதொச நிறுவனத்தின் பெருமைக்கு   பங்கம் விளைவித்துள்ளதாக    குறிப்பிடுபவை வேடிக்கையாகவுள்ளது.  

கடந்த காலங்களில் இந்நிறுவனத்தில் இடம் பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் புதிதாக தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

சதொச  நிறுவனம் நீதியை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தை நாடுவது வரவேற்கத்தக்கது. 

 கொழும்பில் இருந்து  சதொச நிறுவனத்திற்கு சொந்தமான   வாகனங்கள் தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக சென்றுள்ளமைக்கான ஆதாரங்கள்   முழுமையாக  கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை  நீதிமன்றில் பகிரங்கப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39