விகாரையொன்றிலிருந்த அரச மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்ததில் 3 முன்பள்ளி மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல்-நர்மல, பக்கமூண என்ற பிரேதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை முடிவுற்ற நிலையில் மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து எதிர்பார விதாமாக நிகழ்ந்துள்ளது.