மினுவங்கொடை பகுதியில் வைத்து களு அஜித் என்பவரை சுட்டுக்கொலை செய்தமை தொடர்பில் ஹினட்டியான சங்கா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஜா - எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏக்கல மஹாவத்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடை களு அஜித் எனப்படும் கிஸாந்த அஜித் குமார என்பர் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான 31 வயதுடைய ஹனட்டியான சங்கா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.