(எம்.மனோசித்ரா)

திருகோணமலை ரொக்கி முனையத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளைப்பயன்படுத்தி சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் செவ்வாய்கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிழக்கு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கின்னியாவைச் சேர்ந்த 27 - 56 வயதிற்கிடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களிடமிருந்து மீன்பிடி படகு உள்ளிட்ட மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன் வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.