(செ.தேன்மொழி)

ஜா-எல பகுதியில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா-எல கலுபாலத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை வலானை குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

58 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 11 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

சந்தேக நபரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.