இந்தியா, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளியொருவர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நீலியாம்பட்டி முத்துராஜா தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விளைநிலத்தில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்து, இயந்திரம் மூலம் வைக்கோல் சுற்றிக் கட்டும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தை இயக்கும் பணியில் கண்ணன் (25) ஈடுபட்டுள்ளார்.திங்கள்கிழமை மாலை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தபோது பழுதை நீக்க கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த பகுதி மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.