'ரெய்ன் கப்' ஆக மாறுமா வோர்ல்ட் கப்?

Published By: Vishnu

12 Jun, 2019 | 01:27 PM
image

ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது கடந்த மாதம் 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இறுதிப்போட்டி, அரையிறுதிப் போட்டி, லீக் போட்டிகள் உள்ளடங்களாக மொத்தமாக 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 16 போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இந்த 16 போட்டிகளிலும் நான்கு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று போட்டி எவ்வித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி கார்டீப்பில் நடைபெற்ற 7 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை  அணிகள் மோதின. இப் போட்டியின்போதும் மழை குறுக்கிட்டது எனினும் மழை முடிவடைந்த பின்னர் டக்வெத் லூவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்கு வழங்கப்பட்டது.

அதேபோன்று கடந்த 7 ஆம் திகதி பிரிஸ்டலில் ஆரம்பமாகவிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டியின் மழையால் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த 10 ஆம் திகதி சவுதம்டனில் நடைபெற்ற 15 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதின இப்போட்டியில் தென்னாபரிக்க அணி 7.3 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 29 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இப் போட்டியும் இடைநடுவில் முடிவின்றி கைவிட்டப்பட்டது.

நேற்றைய தினம் பிரிஸ்டலில் ஆரம்பமாகவிருந்த 16 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவிருந்தன. இப் போட்டியும் மழையால் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் இலங்கை அணி எதிர்கொண்ட பேட்டிகளாகும். இதனால் இலங்கை அணி ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

இந் நிலையில் மேலும் சில போட்டிகள் மழையால் பாதிப்படையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. இங்கிலாந்தில் உள்ள வானிலையை பொறுத்தவரை உலக கோப்பை தொடர் முழுவதுமே மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது. இதனால் வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் அதிர்ப்திக்குள்ளாகியுள்ளனர்.

இதேநிலை நீடித்தால் லீக் சுற்று முடிவில் சில அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

மழை இவ்வாறு நீடித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் :

* லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அரையிறுதி வாய்ப்புக்குரிய அணிகள் ஒரே புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தால் எந்த அணி அதிகம் வெற்றிபெற்றுள்ளது என்று பார்க்கப்படும். அதிலும் சமநிலை நீடித்தால் ரன்-ரேட் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். அதுவும் சமனாக இருந்தால், அவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் யார் அதிக வெற்றி பெற்றார்கள் என்று பார்ப்பார்கள். ஒரு வேளை இந்த மூன்று விடயங்களும் சமனாக இருந்தால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக தரவரிசைப் பட்டியலில் யார் முன்னிலை பெற்றிருந்தார்கள் என்பதன் அடிப்படையில் அரையிறுதி அணி தெரிவாகும்.

* லீக் சுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) கிடையாது. ஆனால் லீக் சுற்று ஆட்டத்தின் போது மழையால் தாமதம் ஆனால் காலநேரத்தை நீட்டிக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.

* அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ‘ரிசர்வ் டே’ வைக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்படும்.

* அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.

* அரையிறுதி ஆட்டத்தை மழையால் கைவிட வேண்டிய சூழ்நிலை வந்தால், லீக் சுற்றில் முன்னிலை வகித்த அணிக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்கும்

* இறுதி ஆட்டத்துக்கான நாட்களில் மழை பெய்தால் இரு அணிகளும் கிண்ணத்தை பகிர்ந்து கொள்ளும்.

இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி நான்காவது இடத்திலும், இலங்கை அணி ஐந்தாவது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகள் அணி ஆறவாது இடத்திலும், பங்களாதேஷ் அணி ஏழாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 8 ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி ஒன்பதாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி பத்தாவது இடத்திலும் உள்ளது.

photo credit : ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59