கடந்த 3 ஆம் திகதி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் திடீரென காணாமல் போன நிலையில்,அதன் உதிரிப்பாகங்கள் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தின் உதிரிப்பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் 13 பேருடன்  இம்மாதம் 3 ஆம் திகதி பறந்துகொண்டிருக்கும் போது காணாமல் போனது. 

 12,000 அடி உயரத்தில் உள்ள மலைத்தொடருக்கருகில் காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் ஹெலிகொப்படர்களை பயன்படுத்தி விமானப்படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அருணாசலப்பிரதேசத்தில் சியாங் மாவட்டத்தில் பயூம் வட்டாரத்தில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடந்ததை விமானப்படையினர் உறுதி செய்துள்ளனர்.

எனினும் விமானத்தில் பயணித்த 13 பேர் மாயமாகியுள்ளதோடு,அவர்களைத் தேடும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.