பிரித்தானியாவில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 உறுப்பினர்கள் அதில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களில் இருவர் இறுதி வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதையடுத்து குறித்த இருவருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெறுகின்றவர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் தெரிவுசெய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 10 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு,

01.Environment Secretary Michael Gove ;- சுற்றுச்சூழல் செயலாளர் மைக்கேல் கோவ்

02.Health Secretary Matt Hancock ;- சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்

03.Former Chief Whip Mark Harper ;- முன்னாள் தலைமை விப் மார்க் ஹார்பர்

04.Foreign Secretary Jeremy Hunt ;- வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட்

05.Home Secretary Sajid Javid ;- உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித்

06.Former Foreign Secretary Boris Johnson ;- முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜோன்சன்

07.Former Leader of the House Andrea Leadsom ;- முன்னாள் தலைவர் ஹவுஸ் ஆண்ட்ரியா லட்ஸம் 

08.Former Work and Pensions Secretary Esther McVey ;-முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மெக்வீ

09.Former Brexit Secretary Dominic Raab ;- முன்னாள் பிரெக்ஸிட் செயலாளர் டொமினிக் ராப்

10.International Development Secretary Rory Stewart ;- சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரோரி ஸ்டீவர்ட்