வாழ்க்கையில் எனது மகனிற்கு சில விடயங்களை உணர்த்தவேண்டும் என விரும்பியதால் நான்  கண்டிப்பான தந்தையாக விளங்கினேன் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

எனினும் எனது மகன் குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் போன்ற ஒரு மகனிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ள யோக்ராஜ் சிங் நான் எனது மகனிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் மிகவும் கடுமையாக நடந்துகொண்டேன் என யுவி நினைத்தால் அதற்கு காரணம் உள்ளது நான் அவர் சில விடயங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்துகொண்டேன் என 61 வயது ஜோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யோக்ராஜ் சிங் இந்தியாவிற்காக ஒரு டெஸ்ட் ஆறு ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்தவேளை யுவராஜ் சிங் எனது அப்பா ஒரு டிராகன் போன்றவர் டிராகனை சந்திப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம் என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஓய்விற்கு முன்னர் எனது அப்பாவுடன் சிறந்த உறவை ஏற்படுத்தியுள்ளேன் மனது நிம்மதியாக உள்ளது என யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.