குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்திலேயே பரீட்சை எழுதிய தாய்

Published By: Digital Desk 3

12 Jun, 2019 | 11:42 AM
image

எத்தியோப்பியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்கு பின் வைத்தியசாலையில் படுக்கையிலேயே தனது பரீட்சையை எழுதியுள்ளார்.

21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார்.

ஆனால் ரமழான் பெருநாள் காரணமாக அவரது உயர்தரப் பரீட்சைகள் தள்ளி வைக்கப்பட்டது.

திங்கட்கிழமையன்று அவருக்கு பரீட்சைகள் நடப்பதற்கு இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதியுள்ளார்.

''கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை'' என்றார்.

ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட பரீட்சைகளை திங்கட்கிழமையன்று வைத்தியசாலையில் எழுதினார். அடுத்த இரண்டு நாட்களில் நடக்கும் பரீட்சைகளை அவர் பரீட்சை மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார்.

இந்நிலைியில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

''எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன்'' என தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் தனது மனைவியை பரீட்சை எழுதுவதற்கு அவர் படித்த பாடசாலையை இணங்கச் செய்ததாக கணவர் தெரிவித்தாதுள்ளார்.

எத்தியோப்பியாவில் உயர்தர பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டுவிட்டு பின்னர் படிப்பை முடிப்பது அங்குள்ள பாடசாலை மாணவிகளிடம் பரவலாக காணப்படும் விடயம்.

அல்மாஸ் தற்போது கல்லூரியில் சேர்வதற்கான இரண்டு வருட படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புகிறார் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10