பாகிஸ்தான் வழியாக இந்திய பிரதமரின் விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் வரை நடை பெறவுள்ளது.

இம் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக இந்தி செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இம்மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் மாநாட்டிற்கு செல்வதற்கு பாகிஸ்தான் வழியாக செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

புல் வா மா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானங்கள்,பாகிஸ்தான் வான் பறப்பில் செல்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே இந்திய பிரதமரின் விமனாம் பாகிஸ்தான் வழியாக செல்லலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காண் அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.