இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ளார்.

தனது அடுத்த பட தயாரிப்பு குறித்த கலந்துரையாடலுக்காக இந்தியா சென்ற ரஞ்சன் ராமநாயக்க அங்கு உலக நாயகன் கமலஹாசன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது வாழ்க்கையில் அடுத்து தான் நடிக்க போகவுள்ள படமானது மிகவும் பிரமாண்டமாக அமையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.