காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி

Published By: Priyatharshan

12 Jun, 2019 | 06:56 AM
image

(ஆர்.யசி )

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார். 

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹித் ஜமா அத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர் எனவும் விசேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார். 

21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு சாட்சியமளிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மத் அசாத் சாலி இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார். அவரது சாட்சியம்,

நான் அசாத் சாலி, இன்று நாட்டில் ஆட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரிந்துகொள்ள முடியாத காலகட்டத்தில் என்னை சாட்சியத்துக்கு அழைத்துள்ளீர்கள். எது எவ்வாறு இருந்தாலும் நான் எனது நன்றிகளை தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு அடிப்படைவாதி என்ற ரீதியில் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பல தடவைகள் நான் இது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இது குறித்த பல தடவைகள் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். அவரது நகரமாகவே அது இருந்தது. பொலிசார் கூட செல்ல முடியாத சூழ்நிலையே காத்தான்குடியில் காணப்பட்டது.  அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன. அவர் தேர்தலுக்கு உதவினார். இதற்குக் காரணமும் காத்தான்குடியில் சஹ்ரானின் பலமே . சில உடன்படிக்கைகளை செய்துகொண்டு தேர்தலுக்காக சஹ்ரான் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவினார், 

மேலும் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகம் ஷரியா பல்கலைக்கழகம் அல்ல. ஷரியாவை தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம். ஷரியா என்பது எமது வாழ்க்கை. இது குறித்து ஏன் நீங்கள் அனைவரும் தவறான கருத்தினை கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றீர்கள். கிழக்கு பல்கலைக்கழகதில் சரியா பிரிவு உள்ளது. அது தவறில்லை. அதேபோல் சரியா எமக்கு கண்டிப்பாக வேண்டும். இது உங்களுக்கு அவசியம் இல்லை ஆனால் எமக்கு ஷரியா கண்டிப்பாக வேண்டும். எமது வாழ்க்கையுடன் ஷரியா கலந்துள்ளது. அதனை விடுவித்து வாழ முடியாது. ஏன் நீங்கள்  21ஆம் திகதி தாகுதளுக்கும் முஸ்லிம் கலாசாரத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள் என புரியவில்லை. 21ஆம் திகதி தகுதளுக்கும் முஸ்லிம் திருமணத்திற்கும்  இடையில் என்ன தொடர்புகள் உள்ளது? இலங்கையில் நீண்ட காலமாக முஸ்லிம் சட்டம் உள்ளது. அவை இன்று நேற்று உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதனை இப்போது ஏன் நீக்க வேண்டும். முஸ்லிம் சட்டம் எமக்கு அவசியம். 

மேலும் அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் சுதந்திரமாக உள்ளார். இவர் பொலிசாரின் பாதுகாப்பில் தான் உள்ளார்.கொழும்பில் தான் வாழ்கின்றார். இவர்  ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இவர் நேரடியாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடாவிட்டாலும் கூட பயங்கரவாதி ஒருவரை ஆதரிப்பதும் பயங்கரவாதம் தான். இவர் வெளியில் இருக்கும் வரையில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றே நான் கருதுகின்றேன். 

உண்மையில் இவர்கள் குறித்து நான் பல தடவைகைகள் அரச தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தாக்குதல் நடத்த ஒரு வாரத்திற்கு முன்னரும் நான் ஏனைய எமது சமூகத்தினர், சிவில் அமைபினரை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து உரிய காரணிகளை தெரிவித்தேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் கூட நான் கிழக்கில் ஒரு நிகழ்வில் வைத்து தெரிவித்தேன். ஆனால் குற்றவாளிகள் என எம்மை கருதினரே தவிர உண்மையான குற்றவாளிகளை கண்டறிய எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக முழு முஸ்லிம்களும் இன்று விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது . எனினும்  இந்த சப்மவம் இடம்பெற  கடந்த  1995ஆம் ஆண்டு   தொடக்கம் இன்றுவரை உள்ள அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இந்த அடிப்படிவாதம் என்பது கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தெரிவிதுள்ளேன்.அப்போதில் இருந்து  ஐந்து பாதுகாப்பு  செயலாளர்கள் இருந்தனர். 

அவர்களுக்கு நான் உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தல் கொள்ளவில்லை. பொலிசில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகின்றது என நான் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமா அத் அமைபிட்கும்  இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. நான் தவ்ஹித் ஜமா அத் குறித்து பேசிய காரணத்தினால் தான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர்.  தேர்தலில் களமிறங்குவதாக இருந்தாலும் இதில் 200 மில்லியனை செலவழித்துக்கொள்ளவும் ஆலோசனை வழங்கினர். 

கடந்த காலங்களில் இருந்து காத்தான்குடியில் பல அசம்பாவிதங்கள் இடம்பெறாது. அவை அனைத்திற்கும் சஹாரான் காரணமாக இருந்தார், இது குறித்து எமது முஸ்லிம் மக்கள் பல முறைப்பாடுகளை  செய்தும் பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹாரானை கைதுசெய்ய மக்கள் கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இவை எல்லாம் இரகசியமான விடயங்கள் அல்ல. அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும். அதேபோல் தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என கூறினோம். ஆனால் தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பும் பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர். இதுதான் உண்மை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38