சாணக்கியமற்ற அரசியல் போராளியா வைகோ !

Published By: Raam

30 Apr, 2016 | 06:54 PM
image

அர­சி­யலில் அவ்­வப்­போது அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் ஏற்­ப­டுத்­து­வது வைகோ­வுக்கு ஒன்றும் புதி­ய­தல்ல. ஆனால் இம்­முறை வைகோ ஒரு புரட்­சியை நடத்­தி­யி­ருக்­கிறார். இதில் ஆடிப்­போ­யி­ருப்­பது. ம.தி.மு.க.வினரும் அவ­ரது கூட்­டணி கட்­சி­களும் மட்டும் அல்ல. முழு தமி­ழக அர­சியல் வட்­டா­ர­மும்தான்.

தமி­ழ­கத்தை பொறுத்­த­வ­ரையில் கட்­சி­த் த­லை­வர்கள் தமது வேட்­பாளர் பட்­டி­யலை மாற்­று­வது வழ­மை­யான ஒரு விடயம். இத்­தேர்­தலில் கூட ஆளும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்­ளிட்ட பல கட்­சி­களின் தலை­மைகள் தாம் முன்னர் அறி­வித்த வேட்­பா­ளர்­களை மாற்றி புதிய வேட்­பா­ளர்­களை அறி­வித்­துள்­ளார். ஆனால் தமி­ழக வர­லாற்றில் முதல்­மு­றை­யாக ஒரு தலைவர் தனது பெயரை வேட்­பாளர் பட்­டி­யலில் இருந்து நீக்­கி­யி­ருக்­கிறார். இது யாருமே செய்யத் துணி­யாத ஒரு காரியம். அத­னால்தான் வைகோ புரட்சி செய்­து­விட்டார் என்­கிறேன்.

தமி­ழர்கள் தனது உயிர் என்று வார்த்தை ஜாலம் காட்டும் அர­சியல் தலை­மை­க­ளுக்கு மத்­தியில் தமி­ழ­னுக்கு உலகின் எந்த மூலையில் எந்த துன்பம் ஏற்­பட்­டாலும் உடனே அதற்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழுந்து குரல் கொடுப்­ப­வ­ராக வைகோ உள்ளார். ஈழப்பிரச்­சினை, காவிரி பிரச்­சினை என எந்த பிரச்­சி­னை­யாக இருந்­தாலும் முதல் குரல் கொடுப்­ப­வர்­களில் ஒரு­வ­ராக வைகோ உள்ளார். 50 வருட கால அர­சியல் ஞானம் உள்ள இந்த தமிழன் தமி­ழ­கத்தின் ஆளும் சக்­தி­யாக மாறு­வதை வெறுப்­ப­வர்கள் இருப்­பது குறைவே. ஆனால், திறமை, ஆளுமை என அனைத்தும் இருந்தும் அதனை சரி­வர பயன்­ப­டுத்தக் கூடிய அர­சியல் சாணக்­கியம் அற்­ற­வ­ரா­கவே வைகோ காணப்­ப­டு­கின்றார். அவரது அர­சியல் வாழ்க்கையைப் புரட்­டி­ப்பார்த்தால் அவ­ரது தெளிவற்ற முடி­வு­க­ளினால் அவர் இழந்த சந்­தர்ப்­பங்­களே அதி­க­மாக உள்­ளது என்­ப­தனை நாம் கண்­கூ­டாக அறி­யலாம்.

தமி­ழக தேர்தல் களம் சூடு­பி­டித்­துள்ள இந்­நே­ரத்தில் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்­வ­தற்­காக தேர்தல் அலு­வ­லகம் வரை சென்று கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்­றி­யமை அவரை சார்ந்­த­வர்­களை மட்டும் அல்­லாது முழு அர­சியல் வட்­டா­ரத்­தையும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதி­ராக ஒரு­மாற்று அணியை தமி­ழ­கத்தில் உரு­வாக்கி ஆட்­சியைக் கைப்பற்­றுவோம், புரட்­சியை ஏற்­ப­டுத்­துவோம் என்று உரக்க குரல் கொடுத்து புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கி­யவர் இன்று சாதி மோதல் வந்­து­விடும் என்று தேர்­த­லுக்கு முழுக்கு போட்­டுள்ளார்.

1964 ஆம் ஆண்டு, பேர­றிஞர் அண்ணா முன்­னி­லையில் சென்னை கோகலே மன்­றத்தில் நடை­பெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கருத்­த­ரங்­கத்தில் கலந்­து­கொண்டு தனது பேச்­சாற்றல் மூல­மாக வைகோ அர­சியல் வாழ் வில் தன் முதல் அடியை எடுத்து வைத்தார்.

பின்னர் திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் முக்­கிய உறுப்­பி­ன­ராக மாறிய வைகோ 1978 -ஆம் ஆண்டு முதன்­ மு­த­லாக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கவும் 1984 ஆம் ஆண்டு இரண்­டா­வது முறை­யாக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கவும் 1990 ஆம் ஆண்டு மூன்­றா­வது முறை­யாக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கவும் 18 ஆண்­டுகள் பத­வியில் இருந்தார். ஆயினும், 1992 ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கரு­ணா­நி­தியைக் கொலை செய்ய முயற்­சித்தார் என்று கொலைப்பழி சுமத்தப்பட்டு தி.மு.க.விலி­ருந்து நீக்­கப்­பட்டார். அதன் பின் மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தை 1994 ஆம் ஆண்டு தொடங்­கினார்.

தி.மு.க.வில் ஸ்டாலி­னுக்கு பட்டாபிஷேகம் நடத்த முயற்­சிப்­ப­தாக சொல்லி தனிக்கழகம் கண்ட வைகோ, 1996 ஆம் ஆண்டு ஜனதா தளம், கம்­யூனிஸ்ட் கூட்­ட­ணி­யுடன் தேர்­தலை சந்­தித்தார். அ.தி.மு.க. ஊழல் கட்சி, தி.மு.க. குடும்ப கட்சி என்ற விமர்­ச­னத்தை முன்­வைத்து சட்­டப்­பே­ரவைக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஒரு­சேர போட்டியிட்டார். இரண்­டி­லுமே கிடைத்­தது தோல்­விதான். இத்­தேர்­தலில் அ.தி.மு.க. வர­லாறு காணாத தோல்­வியை கண்­ட­தோடு, தி.மு.க. ஆட்­சி­ப்பீடம் ஏறி­யது. இதன்­போது ‘காட்­டாற்று வெள்ளம் கரை­பு­ரண்டு ஓடும்­போது சில சந்­தன மரங்­களும் அடித்துச் செல்­லப்­படும். அப்­ப­டித்தான் அ.தி.மு.க.வுக்கு எதி­ரான அலையில் நாங்­களும் அடித்துச் செல்­லப்­பட்டு விட்டோம்’ என்று தனக்கு தானே சமா­தானம் சொல்லிக்கொண்ட வைகோ பின்னர் 1998 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வாஜ்­பாயை பிர­த­ம­ராக்க வேண்டும் என்­ப­தற்­காக அ.தி.மு.க. -– பா.ஜ.க. கூட்­ட­ணியில் இணைந்தார். ஊழல் கட்சி என்று அ.தி.மு.க. வை விமர்­சித்த வைகோ அ.தி.மு.க.வுட­னேயே கூட்டு சேர்ந்து அத்­தேர்­தலில் சிவ­கா­சியில் போட்­டி­யிட்டார். அதில் வைகோ வெற்­றியும் பெற்றார். அதன்­போது வாஜ்பாய் தலை­மை­யி­லான அரசில் வைகோ­வுக்கு அமைச்­ச­ரவை பொறுப்பு வழங்க தயாராக இருந்­தனர். ஆனால் வைகோ அதனை தவ­ற­விட்டார். இந்­நி­லையில் வாஜ்பாய் தலை­மை­யி­லான அரசை 13 மாதங்­களில் அ.தி.மு.க. கவிழ்த்­தது. இத­னை­ய­டுத்து ‘ஜெய­ல­லிதா தமக்கு நம்­பிக்கை துரோகம் செய்­து­விட்­ட­தாக கூறி அந்தக் கூட்­ட­ணியில் இருந்து வைகோ வில­கினார்.

பின்னர் 1999 ஆம் ஆண்டு பாரா­ளு ­மன்றத் தேர்­தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்­டணி அமைத்­தது. தன்­மீது கொலை­பழி சுமத்­திய தி.மு.க.வின் அந்த அணி யில் வைகோ­ இடம்பெற்­றமை விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­யது. ஆயினும் அப்­போது ‘‘நாங்கள் தி.மு.க. கூட்­ட­ணியில் இணை­ய­வில்லை. தி.மு.க. தான் எங்கள் கூட்­ட­ணியில் இணை ந்­துள்­ளது என்றார்.

1998 மற்றும் 1999 ஆம் ஆண்­டு­களில் நடந்த பாரா­ளு­மன்ற பொதுத்­தேர்­தலில் சிவ­காசி தொகு­தியில் போட்­டி­யிட்ட வைகோ அதில் வெற்­றி­பெற்றார்.

ஆனால், 2001 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க.வுடன் தேர்­தலில் கூட்­டணி அமைக்க முயற்­சித்தார். 21 தொகு­தி­களை ம.தி.மு.க."வுக்கு வழங்க தி.மு.க. சம்­ம­தித்­தது ஆனாலும், 25 தொகு­தி­களைக் கேட்ட வைகோ, சங்­க­ரன்­கோவில் தொகு­தியை தர மறுக்­கி­றார்கள் என்ற ஒரு கார­ணத்தைக் கூறி தி.மு.க.வுட­னான கூட்­டணிப் பேச்சை முறித்தார். கடை­சியில், பா.ஜ.க. போட்­டி­யிடும் தொகு­தி­களைத் தவிர மற்ற தொகு­தி­களில் தனித்துப் போட்­டி­யிட்ட ம.தி.மு.க, அத்தேர்­தலில் தோல்­வியை தழுவி­ய­தோடு பெரும்­பா­லான இடங்­களில் தேர்தல் வைப்பு பணத் தொகையை பறி­கொ­டுத்­தது.

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்குத் தொடர்ச்­சி­யாக ஆத­ர­வ­ளித்து வரும் வைகோ அவர்­க­ளுக்கு ஆத­ர­வாகப் பேசி­ய­தாக கூறி 2001 ஆம் ஆண்டு பொடா சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்டு 19 மாதங்கள் வேலூர் சிறை­யி­லி­ருந்தார். அதன்­போது தமி­ழ­கத்தில் ஜெய­ல­லி­தாவின் ஆட்சி நடை­பெற்றது. அக்­கா­லப்­ப­கு­தியில் தமி­ழக எதி­ர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த கரு­ணா­நிதி இரண்டு முறை வேலூர் சிறைக்கும் ஒரு­முறை பொடா நீதி­மன்­றத்­துக்கும் நேரில் சென்று வைகோவை சந்­தித்தார். இதன்விளைவு 2004 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தி.மு.க. கூட்­ட­ணிக்கு அச்­சா­ர­மா­னது. கருணாநி­தியின் வேண்­டு­கோளை பிணையில் ஏற்­று­வெ­ளியில் வந்த வைகோ, வீட்­டுக்­குக்­கூட போகாமல் அண்ணா அறி­வா­லயம் சென்றார். அவரை வர­வேற்று முர­சொ­லியில் கவிதை எழுதிவிட்டு, சால்­வை­யோடு காத்­தி­ருந்தார் கரு­ணா­நிதி. ''என் வாழ்­நாளில் இனி அண்ணன் கலை­ஞரை எதிர்க்கமாட்டேன். அர­சியல் அனு­பவம் எனக்கு கற்றுத் தந்த பாடம் இது’’ என்று அறி­வா­ல­யத்தில் நின்று உறு­தி­படக் கூறினார் வைகோ. 2004 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சிவ­காசி, பொள்­ளாச்சி, வந்­த­வாசி, திருச்சி ஆகிய தொகு­தி­களை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியது தி.மு.க. ஆனாலும் பழ­நியை கேட்டு முரண்டு பிடித்தார் வைகோ. அவரை சமா­தானப்படுத்த கரு­ணா­நிதி முயற்­சித்தார். ஆனாலும் சமா­தா­னத்தை ஏற்­றுக்­கொண்­டதுபோல இருந்த வைகோ, கடைசி நேரத்தில் சிவ­கா­சியில் தான் போட்­டி­யி­டாமல் சிப்­பிப்­பாறை ரவிச்­சந்­தி­ரனை நிறுத்­தினார்

இந்தத் தேர்­தலில் 4 தொகு­தி­களில் ம.தி.மு.க. வெற்­றி பெற்­றது. அதன்­போது காங்­கிரஸ் தமது அமைச்­ச­ர­வையில் வைகோ­வுக்கு இட­ம­ளிக்கத் தயா­ராக இருந்­தது. ஆயினும் வைகோ அதனை ஏற்கமறுத்து, அர­சுக்கு வெளியில் இருந்து ஆத­ரவு அளித்தார். இதுபோன்ற சந்­தர்ப்­பங்­களை எந்த அர­சியல் தலை­வனும் அத்­தனை இல­குவில் தவ­ற­விடமாட்­டான். ஆனால் வைகோ 2 ஆவது முறை­யாக தனக்கு கிடைக்­க­வி­ருந்த அமைச்­ச­ரவை பத­வியை தவ­ற­விட்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.

2006 ஆம் ஆண்டு சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லிலும் தி.மு. க.வுடன் கூட்­டணி பேச்சுவார்த்­தையைத் தொடர்ந்தார் வைகோ. திருச்­சியில் தேர்தல் சிறப்பு மாநாடு கூட்­டிய தி.மு.க., அங்கே வைகோ­வுக்­கும் மிகப்பெரிய உருவ பதாகைகள் வைத்து அழைப்­பி­த­ழிலும் முக்­கி­யத்­துவம் தந்­தது. ஆனால், மாநாட்­டுக்கு ஒருநாள் முன்­ன­தாக போயஸ் கார்­ட­னுக்கு போன வைகோ, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நான் சிறையில் இருக்­கும்­போது தன்னை கட்­டா­யப்­ப­டுத்தி கூட்­டணி உடன்­பாட்டில் தி.மு.க. இணைத்து விட்­டது எனவும், பட்­டத்து இள­வ­ர­ச­ருக்கு அதா­வது ஸ்டாலி­னுக்கு பட்டம் சூட்­டு­வ­தற்­காக என் கட்­சியை நசுக்கப் பார்க்­கி­றார்கள் என்று பர­ப­ரப்­பாக பேட்டியளித்தார்.

அதன் பின்னர் அ.தி.மு.க.வு­டன் கூட்­டணி சேர்ந்தார். அத் தேர்­தலில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகு­தி­களை அ.தி.மு.க ஒதுக்­கி­யது. அப்­போதும் சிவ­கா­சியில் வைகோ போட்­டி­யி­டுவார் என்று எதிர்­பார்க்கப்பட்­டது. ஆனால், அங்கு ஆர்.ஞானதாஸை நிறுத்­தினார். அந்தத் தேர்­தலில் 6 தொகு­தி­களில் மட்­டுமே ம.தி.மு.க. வெற்றிபெற்­றது. 2009 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் அ.தி­.மு.க. கூட்­ட­ணியில் நீடித்த ம.தி.மு.க. 4 தொகு­தி­களில் போட்­டி­யிட்டு ஒரு தொகு­தியில் மட்­டுமே வெற்­றி­பெற்­றது.

இத­னை­ய­டுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அ.தி.மு.க.விடம் 25 தொகு­தி­களை வைகோ கேட்டு முரண்டுபிடித்தார். ஆனால் 12 தொகு­திக்கு மேல் கொடுப்­ப­தற்கு ஜெய­ல­லிதா மறுத்துவிட்டார். இதனால் ஜெய­ல­லி­தா­வுடன் முரண்­பட்ட வைகோ அ.தி.மு.க. கூட்­ட­ணியை முறித்துக் கொண்டார்.

ஆனால் அத்­தேர்­தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து ஜெய­ல­லிதா தமக்கு ஒதுக்­கிய தொகு­தி­களில் போட்­டி­யி­டுவோம், சில தொகு­தி­களில் மட்டும் தனித்துப் போட்­டி­யி­டலாம் என்று ம.தி.மு.க.வினர் கருத்து தெரி­வித்­தனர். ஆனால் அவை இரண்­டையும் புறக்­க­ணித்­து­விட்டு, தேர்­தலில் ம.தி­.மு.க. போட்­டி­யிடவில்லை என்ற புதிய முடிவை எடுத்தார் வைகோ. உண்­மையில் 2011 ஆம் ஆண்டு நடை­பெற்ற தமி­ழக தேர்­தலில் ஈழத்தின் இறுதி யுத்தம் பெரும் செல்­வாக்கை செலுத்­தி­யது. இலங்­கையில் இலட்­சக்­க­ணக்­கான தமி­ழர்கள் கொல்­லப்­பட்­ட­மைக்கு தி.மு.க. – காங்­கிரஸ் கட்­சியின் கூட்­ட­ணியே காரணம் தமி­ழின துரோ­கிகள் என தெரி­வித்தே எதி­ர்க்­கட்­சிகள் அனைத்தும் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டன. இத்­தேர்­தலில் தொடர்ந்து ஈழப்­பி­ரச்­சி­னைக்கு வெளிப்­ப­டை­யாக குரல் கொடுத்து வரும் வைகோ களம் இறங்­கி­யி­ருந்தால் நிச்­ச­ய­மாக வெற்­றிப்­பெற்­றி­ருப்பார். ஆனால் அவர் தேர்­தலை புறக்­க­ணித்துவிட்டார். இந்­நி­லையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த வைகோ, 7 தொகு­தி­களை பெற்று போட்­டி­யிட்டார். ஆனால், ஒன்­றில் ­கூட வெற்றிபெற­வில்லை. பத­வி­யேற்பு விழா­வுக்கு வைகோ­வையும் அழைத்தார் மோடி. ஆனால், அந்த பதவி ஏற்பு விழாவில் இலங்­கையில் தமி­ழின அழி­வுக்கு கார­ண­மான அப்­போ­தைய இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ வுக்கு மோடி அழைப்பு விடுத்­ததைக் கண்­டித்து, மோடியின் பத­வி­யேற்பு விழாவில் கலந்துகொள்­ளாத வைகோ அன்றைய தினம் டில்­லியில் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்­தினார். அதன்பின்­னர்­ கூட்­டணியைவிட கொள்­கைதான் முக்­கியம் என்று சொல்லி, பா.ஜ.க. கூட்­ட­ணியில் இருந்து வெளி­யே­றினார்.

இந்­நி­லையில் தமி­ழ­கத்தில் மத­வாத, சாதி பிரச்­சி­னைகள், ஊழல் என்­பன நிறைந்து விட்­ட­தாக கூறிய வைகோ மக்கள் நலக் கூடியக்கத்தை கடந்த ஆண்டு தொடங்­கினார், பின் தேர்­த­லுக்­காக அதை மக்கள் நலக் கூட்­ட­ணி­யாக மாற்­றினார். விடு­தலை சிறுத்­தை­களின் தலைவர் தொல்.திரு­மா­வ­ளவன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செய­லாளர் ஜி.ராம­கி­ருஷ்ணன், இந்­திய கம்யூ. கட்சி மாநிலச் செய­லாளர் ஆர்.முத்­த­ரசன் ஆகிய நால்­வ­ரையும் ஒன்­றாக்கி வைகோ உரு­வாக்­கி­ய­துதான் மக்கள் நல கூட்­டணி. நால்வர் அணி என்று இதனை அழைத்த வைகோ தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்னர் தே.மு.தி.க.வை இக் கூட்­ட­ணியில் இணைக்க கடும் முயற்சி செய்­தார். இதன்­போது தி.மு.க.வும் விஜ­ய­காந்தை தம்­முடன் இணைக்க பெரும் பிர­யத்­தனம் செய்­தது. கடை­சியில் வைகோ வென்றார். தமது கூட்­ட­ணியை பஞ்­ச­பாண்­டவர் அணி என மாற்­றினார். கூட்­ட­ணியின் முதல்வர் வேட்­பா­ள­ராக விஜ­யகாந்தை அறி­வித்து தேர்தல் பணி­களை தொடங்­கினார். ஆனால் இந்த ஐவர் அணியை தமி­ழகத்தில் புதி­ய­தொரு மாற்று சக்­தி­யாக மாற்ற வைகோ முயற்­சித்தார். அதன் விளைவு பழம்பெரும் தமி­ழக தலை­வர்­களில் ஒரு­வ­ரான மூப்­ப­னாரின் மகன் வாசன் தலை­மை­யி­லான த.ம.கா.வும் இக் கூட்­ணியில் இணைந்­தது. தற்­போது அறுவர் அணி ஆறு­முகம் என்­றெல்லாம் இக் கூட்­டணி அழைக்­கப்­ப­டு­கின்­றது. இக் கூட்­ட­ணியின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் வைகோ.

இக் கூட்­டணி தமி­ழ­கத்தின் ஆட்­சியை கைப்­பற்­றுமா என்­பது கேள்விக்குறியே. ஆனால் ஒரு மிகச்­சி­றந்த மாற்று சக்­தி­யாக 2 ஆம் அல்­லது 3 ஆம் சக்­தி­யாக உரு­மாற கூடிய வாய்ப்பு உள்­ளது. ஏனெனில் தமி­ழ­கத்தை வெள்ளம் புரட்டி போட்­டாலும் ஜெய­ல­லிதா சொத்துக்­ கு­விப்பு வழக்கில் சிறை சென்று வந்­தாலும் அவ­ரது வாக்கு வங்கி பல­மா­கவே உள்­ளது. அதே­வேளை குடும்ப ஆட்சி, 3 ஜி ஊழல் மற்றும் ஈழத் தமி­ழர்களின் படு­கொலை என்­பன தி.மு.க. கூட்­ட­ணியை மீண்டும் மீண்­டெ­ழ­வி­டாது பாதகம் விளை­விக்க கூடும்.

இத் தேர்தல் மூன்றாம் சக்தி ஒன்­றுக்கு கள­மாக அமையும். அது ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக மாறலாம். விஜ­யகாந்த் ஒரு நட்­சத்­திர போட்­டி­யாளர். அவரை முதல்­வ­ராக்­குவோம் என்­பதில் குறித்த கூட்­ட­ணியில் உள்ள அனை­வரும் முனைப்­பாக உள்­ளனர். ஆயினும் ஜெய­ல­லி­தாவின் 'பீ' அணி­யாக வைகோ செயற்­பட்டே மக்கள் நலக் கூட்­ட­ணியை உரு­வாக்­கினார். 1500 கோடி ரூபா இதற்­காக கைமா­றி­ய­தாக தி.மு.க. குற்றம் சுமத்தி வந்­தது. இந்நிலையில் வைகோ இந்த தேர்­தலில் இருந்து வில­கி­யமை எதிர்­க்கட்­சி­யி­னரின் விமர்­ச­னத்­துக்கு மேலும் வாய்ப்பை ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்­ளது. கரு­ணா­நி­தியை சாதியம் கூறி பேசி­ய­தாக வைகோ­வுக்கு எதி­ராக தி.மு.க.வினர் கொடும்­பாவி எரித்து போராட்­டகள் நடத்­தினர். பின்னர் வைகோ, கரு­ணா­நி­தி­யிடம் மன்­னிப்பு கோரினார். அத்­தோடு காங்­கிரஸ் மாநில தலைவர் இளங்­கோவன் ஜெய­ல­லி­தாவை தாக்­கி­பே­சி­ய­மைக்கு கண­்டனம் வெளியிட்­டி­ருந்­தார். இது அ.தி.மு.க.வுக்கு ஆத­ர­வாக வைகோ செயற்­ப­டு­கிறார் என்ற குற்­றச்­சாட்­டடை எதி­ர­ணி­யினர் சுமத்­து­வ­தற்கு மேலும் வழி­வ­குத்து கொடுத்­துள்­ளது. தேர்­தலில் போட்­டி­யிட்டால் தோற்று விடுவோம் என வைகோ­வுக்கு பயம் ஏற்­பட்­ட­தா­லேயே அவர் போட்­டியில் இருந்து வில­கி­யுள்ளார் என்றும் விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது. வைகோவின் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நட­வ­டிக்­கைகள் கூட்­ட­ணியை ஏற்­க­னவே சங்­க­டத்தில் ஆழ்த்­தி­யுள்ள நிலையில், தற்­போது தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை என அறி­வித்­துள்­ளமை மேலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும்­ என்­பதில் மறுப்பு இல்லை. இது கூட்­டணி வெற்­றி­வாய்ப்­பையும் பாதிக்­கலாம்.

வைகோ எடுத்த முடிவு சரியா தவறா என்­ப­தனை விட இது ஒரு உணர்ச்­சி­வ­ச­ப்­பட்ட நட­வ­டிக்­கையே ஆகும். தி.மு.க. கோவில்பட்­டியில் சாதி மோதலை ஏற்­ப­டுத்த முனை­கி­ற­து. என்னால் இங்கு சாதிக் கல­வரம் ஏற்­படக் கூடாது. அத­னால்தான் தேர்­தலில் இருந்து வில­கு­கிறேன். போட்­டி­யி­ட­வில்லை என்று வைகோ அறி­வித்து விட்டார். உண்­மையில் வைகோ வேட்பு மனுத் தாக்கல் செய்­வ­தற்கு முதல்நாள் அவர் தேவர் சிலைக்கு மாலை அணி­விக்கச் சென்­றி­ருந்த போது அவ­ருக்கு எதி­ராக சிலர் கறுப்புக் கொடி போராட்டம் நடத்­தினர். ஆனால், அதனைப் பெரி­தாக பொருட்­ப­டுத்­தாத வைகோ மறுநாள் வேட்பு மனு­தாக்கல் செய்ய சென்ற போதிலும் அவ­ருக்கு எதி­ராக ஒரு கூட்டம் போராட்டம் நடத்­தி­யது. இது வைகோவை உள­வியல் ரீதி­யாக நிச்­ச­ய­மாக பாதித்­தி­ருக்கக் கூடும். ஆனால் கோவில்பட்­டியை பொறுத்­த­வரையில் ம.தி.மு.க.வின் வாக்கு வங்கி பல­மாக உள்ள இங்கு கடந்த தேர்­தல்­களில் ம.தி.மு.க. வெற்­றி­பெற்­றுள்­ளது. அத்­தோடு கடந்த தேர்­தலில் கூட அனைத்து தேர்தல் மாவட்­டங்­களும் அ.தி.மு.க.வின் அலையில் அடித்து செல்­லப்­பட்­ட­போது கூட ம.தி.மு.க. 27000 வாக்­கு­களை பெற்றது. ஆனால் தற்­போது சாதிக் ­க­ல­வ­ரம் ஏற்­பட்டு விடும் என்று கூறி வைகோ பின்­வாங்­கு­கிறார். எப்­ப­டியோ தெரிந்தோ தெரி­யா­மலோ வைகோ, கரு­ணா­நி­தியை நாதஸ்­வரம் வாசிப்­பவர் என்று கூறி­விட்டார். அதற்கு மன்­னிப்பு கேட்டும் பயனில்லை. சாதியம் கூறி வைகோ பேசி­ய­தாக தி.மு.க.வினர் ஏற்­க­னவே பல எதிர்ப்­பு­களை தெரி­வித்­து­விட்­டனர். இதன் தாக்கம் கோவில்பட்­டியில் தொட­ரலாம் என்ற அச்­சத்தில் கூட வைகோ போட்­டி­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கலம். ஆனால் இது ஒரு தெளி­வற்ற தர­மற்ற முடிவே ஆகுமா.

வைகோ, தேர்­தலில் போட்­டி­யிடவில்லை என்று அறிவித் ததற்கான உண்மைக் காரணம் எதுவாக இருந்தாலும் இந்த முடிவு தேர்தல் களத்தில் தனது கூட்டணியை பலவீனப்படுத்தும் என்பதை உணராதவராக வைகோ உள் ளாரா என கேள்வி எழும்புகிறது. தமது தலைமையான வைகோவே எதிர்ப்புக்கு பயந்து ஒதுங்கினால், பாவம் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? உளவியல் ரீதியாக இந்த பாதிப்பு அவர்க ளையும் தொடரும் அல்லவா. கல்லூரி பருவத்தில் அண் ணாவின் மனதை வென்றவர். மோடி உட்பட இந்திய பிரதமர்கள் பலருடன் நேரடி தொடர்பில் இருந்தவர். யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை யாருக்கும் தெரியாமல் இலங்கை வந்து இரகசியமாக சந்தித்து விட்டு தமிழகம் திரும்பி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் பாராட்டைப் பெற்ற வர். அவரது துணிவு இன்று என்னவானது? வைகோ உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இதுவென்றால் இந்த முடிவு தன்னை நம்பி வந்தவர்களின் அரசியல் வாழ்க்கையையும் பாதித்து விடும் என்பதை வைகோ அறியாதவரா? இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவனும் தன் வாழ்நாள் முழுவதும் வெறும் போராட்டங்களை மட்டும் நடத் திக்கொண்டிருக்க விரும்பமாட்டான். அதனால் எந்த நன்மையும் விளையாது. ஆனால் இலக்கை அடையலாம். அதாவது, மக்களுக்கான போராட்டங்கள் மூலம் மக்களது செல்வாக்கினை பெற்று அதன்மூலம் அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை பெற்று அதன் மூல மாகத்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும். 50 வருடங்கள் அரசியல் வாழ்க்கையில் உள்ள தலைவன் வைகோ, இந்த அரசியல் சாணக்கியத்தை அறியாத வராகவா இருப்பார்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

2023-10-02 17:17:52
news-image

ஊட்­டச்­சத்து குறை­பாட்டில் உயர் மட்­டத்தில் நுவ­ரெ­லியா...

2023-10-02 17:18:14
news-image

அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!

2023-10-02 15:24:56
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'

2023-10-02 15:24:27
news-image

2022ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்...

2023-10-02 13:35:16
news-image

இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

2023-10-02 09:09:54
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 

2023-10-01 19:13:25
news-image

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் : பேரி­ன­வாதம்...

2023-10-01 19:15:04
news-image

பேரா­யரும் மைத்­தி­ரியும்

2023-10-01 19:15:29
news-image

மழை விட்டும் நிற்­காத தூவானம்

2023-10-01 19:15:56
news-image

வலிந்து மூக்கை நுழைத்த அலி சப்ரி

2023-10-01 19:16:10
news-image

மனித புதை­குழி அகழ்­வு­க­ளுக்கு போட்­டி­யாக தங்க...

2023-10-01 19:17:30