இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.

இந் நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டி நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.