அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 51 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஹெலிகொப்படர் மோதி விபத்துக்குள்ளாகியதில் விமானி உயிரிழந்துள்ளார்.

ஹெலிகொப்டர் அவசர நிலமை காரணமாக  கட்டிடத்தின் மேற்கூரையில் தரையிறக்கும் செய்ய முற்பட்டபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்திற்கான காரணம் அங்கு மழை பெய்து வந்ததுள்ளதோடு,தெளிவான வானிலை காணப்படாததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.