(ஆர்.விதுஷா)

சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களை  அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தினர் நாளைய தினம்  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 7.00 மணி முதல் 8,00 மணிவரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுகாதார  அமைச்சில்  இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில்  அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக சட்ட  நடவடிக்கை  எடுக்குமாறும் அவரை கைதுசெய்து  விசாரணைக்கு  உட்படுத்தமாறும் வலியுறுத்தி வைத்திய  அதிகாரிகள்  சங்கத்தினர்  உரிய  தரப்பினரிடத்தில் முறைப்பாடுகளை  வழங்கியுள்ளனர். 

இருப்பினும் இது வரையில்  தகுந்த  நடவடிக்கைகள்  இடம்பெறாத  நிலையில் ராஜித சேனாரத்ன மீதான  குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதனை இட்டு இத்தகைய எதிர்ப்பு  நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.  

இதேவேளை, நளைய தினம், குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு  முன்பாகவும் ராஜித சேனாரத்னவிற்கு  எதிரான துண்டுப்பிரசுர விநியோகம்,  ஆர்ப்பாட்டம்  என்பன  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.