ஊடகவியலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான கடற் படையினரின் அச்சுறுத்தல் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Published By: Daya

11 Jun, 2019 | 05:07 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  போராட்டத்தின்போது செல்வபுரம் பகுதியில் பஸ் நிலையத்தில் மறைந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக இன்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றது. 

குறித்த சம்பவம் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி செல்வபுரம் பகுதியில் பஸ் நிலையத்தில்  சிவில் உடையில் மறைந்து இருந்து குறித்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தமையால் இதனை உறுதிப்படுத்துவதற்காக குறித்த இடத்திற்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு ஊடக வியலாளர்களும் சென்றிருந்தனர். இந்நிலையில் குறித்த நபர் பல்வேறு பொய்யான தகவல்களை கூறியதோடு அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது அங்கு நின்றவர்கள் பிடிக்கப்பட்டு விசாரித்த போதுதான் கடற்படையைச் சேர்ந்தவர் என தெரிவித்தார்.

குறித்த இடத்தில் கடற்படை முகாமில் குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தி அங்கு நின்ற பொலிஸாரிடம் கையளித்திருந்தனர். இருப்பினும் அந்த இடத்தில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அவரை விடுவித்து இருந்ததோடு குறித்த கடற்படை சிப்பாய் வைத்தியசாலையில் சென்று  ஊடகவியலாளர் தவசீலன் தன்னை தாக்கியதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் ஊடகவியலாளர் தவசீலனை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைக்கு அழைத்த போது தன்னை  ஊடகவியலாளர்  தாக்கியதாக தெரிவித்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று இருப்பதோடு அடுத்த வழக்கு தவணையாக ஒன்பதாம் மாதம் பத்தாம் திகதி இடம்பெற இருக்கின்றது .

இந்நிலையில் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக் அமைவாக இன்றைய தினம் குறித்த முறைப்பாட்டில் உடைய விசாரணைகள் இடம்பெற்றது. 

இதன்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமை சேர்ந்த அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், மரியசுரேஷ் ஈஸ்வரி ,ஊடகவியலாளர் தவசீலன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜா தலைமையிலே இந்த விசாரணைகள் இடம் பெற்றது இந்த விசாரணைகளின் போது கடற்படையினர் குறித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு தங்களால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என தெரிவித்த உறுதிமொழியை அடுத்து அவர்களுடைய அந்த பிரச்சினை சுமூகமாக இரண்டு தரப்பினராலும் தீர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் திட்டமிட்டு அநீதி விளைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இன்றையதினம் தெரிவித்திருக்கிறார்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்க மாலைகளை திருடிச்...

2025-03-19 11:01:14
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47