இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Published By: Vishnu

11 Jun, 2019 | 04:09 PM
image

உபாதை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது ‍அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் வலது கை மணிக்கட்டில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது.

இதனால் 3 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு தவானுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தால் உலகக் கிண்ணத் தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாட மாட்டார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின்போது தவான் மொத்தமாக 109 பந்துகளை எதிர்கொண்டு 16 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 117 ஓட்டங்களை விளாசினார். 

தவான் தொடர்பான இந்த அறிவிப்பானது இந்திய ரசிர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், இந்திய அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 

இருந்தபோதும் தவானின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அணிக்குள் ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் இணைத்துக் கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35