ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

க/பெ ரணசிங்கம் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார். 

படம் தொடர்பில் இயக்குனர் தெரிவிக்கையில்,“ கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி விரிவுபடுத்தப்பட்ட கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேசின் தோற்றமும், கதாப்பாத்திரமும் வித்தியாசமானதாக இருக்கும்.” என்றார்.  

இந்த படத்தின் ஒளிப்பதிவை சுதர்சன் ஸ்ரீனிவாசன் கவனிக்க,  வைரமுத்துவின் பாடலுக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான். இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோ சார்பாக ராஜேஷ் தயாரிக்கிறார்.

 இந்தப்படத்தின் தொடக்கவிழா படப்பிடிப்புடன் நேற்று தொடங்கியது.

கடவுச் சீட்டு தொடர்பானதாகவும், கணவனைத் தொலைத்துவிட்டு தேடுவது போலவும் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது-