மறைந்த சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் முக்கிய இடங்களில் மஞ்சள் கொடிகளை பறக்க விடப்பட்டுள்ளதுடன் அவரது ஞாபகார்த்த பதாதைகளும் தேரரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் பல இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.

தேரர் ஒருவரின் மறைவிற்காக இவ்வாறு இம்மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.