(செ.தேன்மொழி)

கொம்பனித்தெரு மற்றும் கொடதெனியாவ பகுதியில் ஹெரோயினுடன் ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலும், கொடதெனியாவ பொலிஸ் பிரிவிலும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதே இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்ததுள்ளது.

இதன்போது கொம்பனித்தெரு பகுதியில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய பெண்ணிடமிருந்து 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொடதெனியாவ பகுதியில் கைது செய்யப்பட்ட படல்கம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனிடமிருந்து 2 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸார் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.