சூடானில் கடந்த வாரம் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது பலர்  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூடானின் துணை இராணுவப்படையினரே இந்த குற்றத்தில் ஈடுபட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துணை இராணுவத்தினர் 70 ற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர் என  மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து  பெண்கள் உட்பட எட்டு பேரிற்கு சிகிச்சையளித்ததாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தங்கள் மருத்துவமனையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இருவரிற்கு சிகிச்சை அளித்ததாக  தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் நேரில் பார்த்த பலர் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பழிவாங்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக பலர் தங்களிற்கு இழைக்கப்பட்ட குற்றம் குறித்து முறைப்பாடு செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் உறுதி செய்துள்ளன.

சூடானின் துணை இராணுவப்படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலின் போது சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் காயமடைந்துள்ளனர்.