இந்தோனேசியா சுமாத்ரா தீவிலுள்ள சினபங் எரிமலை உக்கிரமாக குமுற ஆரம்பித்ததையடுத்து அது தொடர்பில் பிராந்திய அதிகாரிகளால் நேற்று திங்கட்கிமை எசச்ரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் உயிர்ப்புடன் காணப்படும் இந்த எரிமலை நேற்று முன் தினம் இரவு சுமார் 9 நிமிட நேரத்துக்கு உக்கிரமாக குமுறி வானுயர சாம்பலையும் புகையையும் வெளித் தள்ளியதையடுத்து பிராந்திய மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் போது 7 கிலோ மீற்றர் உயரத்துக்கு புகை வெளித்தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த எரிமலைக் குமுறலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை அறிக்கையிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.