லொறி குடைசாய்ந்ததில் எழுவர் காயம்

By Daya

11 Jun, 2019 | 11:03 AM
image

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த லொறி  சாரதியின் வேக கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் லொறியில் பயணித்த எழுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளன நிலையில் சிகிச்சைக்கா  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right