உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் தொடர் பில் விசா­ரணை நடத்துவ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் கூடவுள்ளது.

இன்­றைய தினம்  காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ளனப் பிர­தி­நி­திகள்  மற்றும்  முன்னாள் மேல் மாகாண ஆளுநர்  அசாத் சாலி ஆகியோர்   தெரி­வுக்­குழு முன்  சாட்­சி­ய­ம­ளிக்க  ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. 

 இன்­றைய தினம்   எந்த சிக்­க­லு­மின்றி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின்  விசா­ரணை இடம்­பெறும் என்று தெரி­வுக்­கு­ழுவின் உறுப்­பினர்  கலா­நிதி ஜயம்­பதி   விக்­கி­ர­ம­ரட்ன எம்.பி. தெரி­வித்தார். 

இதே­வேளை   இன்­றைய தினம்  காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ளனப் பிர­தி­நி­திகள் தெரி­வுக்­குழு முன்­சாட்­சி­ய­ம­ளிப்­பார்கள் என்று  ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமும் உறு­திப்­ப­டுத்­தினார். 

 கடந்த வெள்­ளிக்­கி­ழமை  விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை கூட்­டிய  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   இந்தப்  பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை நிறுத்­து­மாறும்  அவ்­வாறு நிறுத்­தா­விடின்   தான் அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள மாட்டேன் என்றும்   எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார். 

 உயர் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்றும்  தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக  தன்­மீ­தான வெறுப்பு வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும்  ஜனா­தி­பதி விசனம் வெளி­யிட்­டி­ருந்தார். 

தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை திங்களன்று கிடைக்கும். அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவேன். அதன் பின்னர் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டி யிருந்தார்.

இதனைவிட வெள்ளிக்கிழமை உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்திருந்தார்.

ஜனாதிபதி இவ்வாறு அறிவித்தபோதிலும் தெரிவுக்குழு அழைத்தால் அதிகாரிகள் சாட்சியமளிப்பதற்காக வருகை தர வேண்டும் என்றும் தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும் எனவும் சபாநாயகர் கருஜெயசூரிய அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தார்.

 இந்த நிலை­யி­லேயே  இன்­றைய தினம்   உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல் தொடர்பில் ஆராய   நிய­மிக்­கப்­பட்ட தெரி­வுக்­குழு   இன்று  பாரா­ளு­மன்­றத்தில் கூடி விசா­ரணை நடத்­த­வுள்­ளது.