அதிகரித்து வரும் வலி நிவாரண மையம்

Published By: Daya

11 Jun, 2019 | 09:44 AM
image

 புற்றுநோயால் ஏற்படும் வலிகள் மிகப் பெரிய மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தரும். இந்த தருணத்தில் இந்த வலிகளை குறைப்பதற்காகவும் வலி நிவாரண நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டன என வைத்தியர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயை முதல் மூன்று நிலைகளில் கண்டுபிடித்தால் அவர்களுக்கு சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கூட்டு சிகிச்சை, சிறப்பு சிகிச்சை ஆகியவற்றை அளித்து அவர்களை குணப்படுத்த இயலும்.

ஆனால் புற்றுநோய் நான்காம் நிலையை எட்டி விட்டால் அந்த புற்று நோயை குணப்படுத்துவது கடினம். அதே தருணத்தில் அந்த புற்றுநோயால் ஏற்படும் வலிகள் மிகப் பெரிய மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தரும். இந்த தருணத்தில் இந்த வலிகளை குறைப்பதற்காகவும் வலி நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த வலி நிவாரண மையத்தில் அனுமதிக்கப்படும் புற்றுநோயாளிகள் அவர்களின் வலியை குறைப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் வலியைப் பற்றி மனதளவில் வலிமையாக கிரகித்துக் கொள்ளும் அளவில் மனதை வைத்திருப்பதற்கான விசேட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களின் மனநிலையை சீராக்குவதற்கு இசை சிகிச்சையும் வழங்கப்படுகிறது. தற்பொழுது இத்தகைய புற்றுநோயாளிகளை வலி நிவாரண நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

புற்று நோயாளிகளுக்கு மட்டும் அல்லாமல் நாட்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்களுக்கும் இத்தகைய வலி நிவாரண நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04