எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 

இதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 138 ரூபாவாகும். அத்துடன்  ஏனைய  எரிபொருட்களின் விலைகளில்  எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.