(எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 162 கோடி ரூபாவுக்கும் அதிக  பணத்தொகையை  மோசடி செய்தமை உள்ளிட்ட மூன்று வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 9 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த சக்வித்தி ரணசிங்க என அறியபப்டும் அபய ரணசிங்க முதியன்சலாகே சந்தன வீரகுமாரவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

குறித்த மூன்று வழக்குகளுக்குமாக மொத்தமாக 6 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை,  ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப்  பிணை ஆகிய பிணை நிபந்தனிகளை பூர்த்தி செய்தே சக்வித்தி ரணசிங்க பினையில் வெளியேறியுள்ளார்.