ஊடகத்துறைசார் இளைஞர்கள் மற்றும் ஐக்கிய மாணவர் முன்னணியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் அதன் (ஐ.மா.மு) தலைவரும், பாதுக்காப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேயவர்தனவை சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பு நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்கால நகர்வுகள், இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் திட்டங்கள் போன்றவை கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, நடப்பாண்டுக்கான ஐக்கிய மாணவர் முன்னணியின் பதவி நியமனங்களும் இராஜாங்க அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.