(நா.தினுஷா) 

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின்  காரணமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார்  தகவல்களையும்  அதிகாரிகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும். புலனாய்வுத்  தகவல்களையோ அல்லது  சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின்  தகவ்லகளையோ கசியவிடப்பட்டால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.