மஹிந்த தேசப்பிரிய அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களுடன் நாளை முக்கிய சந்திப்பு

10 Jun, 2019 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் கட்சி செயலாளர்களுடனான முக்கிய சந்திப்பு நாளை பகல் 2.30 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. காலம் தாழ்த்தப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என்பன குறித்து இந்த சந்திப்பில் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

இந்த சந்திப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கையில், 

சந்திப்பிற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அதே வேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 

மாகாண சபைகளுக்காக ஆயுட்காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தைக் கடந்துள்ளது. அத்தோடு அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகள் இடம்பெறலாம். இது குறித்து கவனம் செலுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கட்சி செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளது. இந்த தேர்தல்களை நடத்துவதில் காணப்படுகின்ற சட்ட சிக்கல்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு கட்டளை பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அதனை நடத்த முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த விடயம் குறித்தும் கட்சிகளின் நிலைப்பாடுகள் பெறப்படவுள்ளதோடு, தேர்தலுக்கான செலவீனங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்படவுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right