(இராஜதுரை ஹஷான்)

பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் நோக்கில்   அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் தற்போது  பிரச்சினைகளை  மேலும் வலுப்படுத்தியுள்ளது.அமைச்சரவை  கூட்டத்திற்கு   கலந்துக் கொள்ள மாட்டேன்  என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அரசியல்  நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள்  பாராளுமன்றத்தில் பாரம்பரிய  கோட்பாடுகளுக்கு அப்பாட்பட்டு  எல்லை மீறி செல்கின்றது.  தேசிய பாதுகாப்பு தொடர்பிலான இரகசியங்கள்   பொது மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.  இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய  இரகசிய தகவல்கள்  பாதுகாக்கப்பட வேண்டும்.

தகவலறியும் சட்ட மூலத்தை அடிப்படைவாகக் கொண்டு   பாராளுமன்ற தெரிவு குழு  வரப்பு  மீறி செயற்படுவதை  ஜனாதிபதி  சுட்டிக்காட்டியும் அதனை பொருட்படுத்தாமல் செயற்படும் நிறைவேற்று அதிகாரத்தை   அவமதிப்பதாக அமையும்.

மீண்டும்  சட்டத்துறைக்கும், நிர்வாகதுறைக்கும் இடையில்  அரசியல் நெருக்கடியினை  ஏற்படுத்தும்  நடவடிக்கைககளே முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது