கேஸ் சிலிண்டர் வெடித்ததில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கருகி உயிரிழந்த சம்பவமொன்று இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

பதுளை மாநகரின் புறநகர்ப்பகுதியில் இலக்கம் 15ல் அமைந்துள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவத்தில் குறித்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த தம்பிக்கா ப்ரியானி ரட்னாயக்க என்ற 44 வயது நிரம்பிய குடும்பப் பெண்ணே இவ்வாறு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் குறிப்பிட்ட வீடும் தீப்பற்றி சேதமாகியுள்ளது. பதுளை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இறந்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால் இப்பெண் தனிமையிலிருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது