பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நடால் 12 ஆவது முறையாகவும் சம்பியனாகியுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2 அம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடாலும் 4 ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின்  டொமினிக் திம்மும் மோதினர். 

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12 ஆவது முறையாகவும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி சம்பியனானார்.

இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை கைப்பற்றிய நபர் என்ற புதிய சாதனையையும் இவர் புரிந்துள்ளார். இதற்கு முன்பு அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் அவுஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

33 வயதான நடால் இந்த மைதானத்தில் மொத்தம் 95 போட்டிகளில் விளையாடி 93 போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த வெற்றியின் மூலம் களிமண் தரை போட்டிகளில் நானே ராஜா என்பதை நடால் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இதேவேளை பெண்கள் ஒற்­றையர் பிரிவில் அரங்­கே­றிய இறுதி ஆட்­டத்தில் 8ஆம் நிலை வீராங்­க­னை­யான ஆஷ்லி பார்டி (அவுஸ்­தி­ரே­லியா), 38ஆம் நிலை வீராங்­க­னை­யான மார்­கெட்டா வோன்ட்­ரோ­சோ­வா­வுடன் (செக்.குடி­ய­ரசு) மோதினார். 

70 நிமி­டங்­களில் வோன்ட்­ரோ­சோ­வாவின் சவாலை முடி­வுக்கு கொண்டு வந்த ஆஷ்லி பார்டி 6-–1, 6–-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்­மு­றை­யாக கிராண்ட்ஸ்லாம் மகு­டத்தை சூடினார். 

பிரெஞ்ச் பகி­ரங்­கத்தை அவுஸ்­தி­ரே­லிய வீராங்­கனை ஒருவர் வெல்­வது 1973ஆம் ஆண்­டுக்கு பிறகு இதுவே முதல் முறை­யாகும்.

23 வய­தான ஆஷ்லி பார்டி 2014ஆம் ஆண்டில் டென்­னிஸில் இருந்து விலகி கிரிக்கெட் வீராங்­க­னை­யாக உரு­வெ­டுத்தார். 

பெண்­க­ளுக்­கான பிக்பாஷ் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்­காக விளை­யா­டிய அவர் 2016ஆம் ஆண்டில் மறுபடியும் டென்னிஸ் களம் புகுந்து இப்போது சிகரத்தை எட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.