இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து.

சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். 

இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட நிலையில், அங்கிருந்து கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதலுக்கு பின்னர் வருகை தந்துள்ள முதலாவது பயணிகள் கப்பலென்பதுடன் குறித்த கப்பலின் வருகையானது இலங்கையில் மீள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.

இலங்கையின் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற கப்பலுக்கு இலங்கை உல்லாசப்பயண ஊக்குவிப்பு சபையினரால் வரவேற்கப்பட்ட நிலையில் ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலாசார நிகழ்வுகளைக் கண்டு கழித்தனர். 

இலங்கை வருகை தந்த ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலபொட தேயிலை நிறுவனம் , அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா , கதிர்காமம் , எல்ல , சீகிரியா மற்றும் கண்டி உற்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.

கப்பல் தரித்துநின்ற நாட்களில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து யால, பண்டாரகம, கொக்கல ஏரி ஆகியவற்றை பார்வையிட்டதுடன் கலபொட தேயிலை நிறுவனம் , அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா, கதிர்காமம், எல்ல, சீகிரியா மற்றும் கண்டி உட்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.

உலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா - 2 இலங்கைக்கு வந்துள்ளமை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என சுற்றுலாத்துறை  அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

எம்.எஸ்.யுரோப்பா எனும் இந்த அதிசொகுசு உல்லாசக்கப்பலின் வருகை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற அண்மைய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் வருகை தந்த முதலாவது வெளிநாட்டு உல்லாசப்பயணக்கப்பல் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது. 

அழகிய இலங்கை தீவிற்கு வருகை தர தீர்மானித்ததற்காக உல்லாசப்பயணிகள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

உங்கள் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த உல்லாசப் பயணக்கப்பலுக்கு இலங்கையில் ஏட்கன் ஸ்பென்ஸ் தனியார் நிறுவனம் உபசரிப்பு முகவராகச் செயற்பட்டது. எம்.எஸ்.யுரோப்பா உல்லாசக் கப்பல் கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்றது.