யாழ், மண்டை தீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
\யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் இமானுவேல் ஆர்னோலட் , பிரதேச செயலர் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1986 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் இறங்குதுறையிலிருந்து தூய ஒளி என்னும் படகில் கடலுக்குச் சென்ற 31 மீனவர்களையும் மண்டைதீவு கடலில் வைத்து முகமூடி அணிந்தவர்களால், கோடரி, , வாள், துவக்குப் பிடி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM