நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அடை்டை ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டைகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளதாகவும், இவ் விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு திணைக்களம் பாடைசாலை அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.