அமெரிக்காவில் இன்னும் கட்டிமுடிக்கப்படாத உலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டலின் கட்டட அமைப்பும் அது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின்ஹொலிவூட் சிட்டியில் திறக்கப்படவுள்ள இந்த ஹோட்டல் மொத்தம் 450 அடியில் கட்டப்படவிருக்கிறது.இதுதான் மிக உயரமான ஹோட்டல் என்கிற பெயரையும் வரலாற்றில் பதிக்கவுள்ளது.
இதில் தங்குவதற்கு வசதியாக 515 சதுர அடியில் விசாலமான அறைகளும் கட்டப்படவுள்ளன. அங்கு 10 ஏக்கரில் லாங்கூன் ஸ்டைலில் பிரமாண்ட நீச்சல் தடாகத்தையும் அமைக்கவுள்ளனர். 12,000 சதுர அடியில் மதுபான சாலைகள்,கடைகள் 41,000 சதுர அடியில் கால்களுக்கான ஸ்பா, நகைச்சுவை திரையரங்கு, 14 விடுதிகள் 228 சூதாட்ட விளையாட்டுகள் என மக்களை முழுக்க முழுக்க மகிழ்ச்சியில் மூழ்கடிக்கச் செய்யும் விடயங்கள் நிறைந்ததாக இந்த ஹோட்டல் இருக்கப் போகிறது.
சுற்றுலாத் தளத்திலும் முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகின்றது.
மேலும் இசைப் பிரியர்களைக் கவரும் விதமாக 7000 பேர் அமரும் வகையில் அரங்கு ஒன்று உருவாகவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி இவ் ஹோட்டலின் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM