பதுளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் முன் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

பதுளையை அண்மித்த எல்ல ரயில் நிலையத்தின் அருகே இடம்பெற்ற குறித்த  சம்பவத்தில் உயிரிழந்தவரின்  சடலம் பண்டாரவளை அரச வைத்தியசாலை பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெலிமடை- கெப்பிட்டிப்பொல பகுதியைச் சேர்ந்த தக்சின லங்காநாத் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக  ஸ்தல விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.