ஓடுதளத்தில் விமானம் சென்று கொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவர், அவசர வழி கதவை திறந்ததால் பரபரப்பு ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இஸ்லாமாபாத் நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டது.

விமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். ஓடுதளத்தில் விமானம் சென்று கொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் கதவின் பொத்தானை அழுத்தினார். கதவு லேசாக திறந்ததும், அதனை , உடனடியாக கதவை மூடிவிட்டார்.

இதனால், பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும், அவர்களது உடைமைகளுடன் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். அவர்கள், ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாற்று விமானத்தில், 7 மணி நேரம் தாமதமாக இஸ்லாமாபாத் சென்றனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உத்தரவிட்டுள்ளார்.