தேர்தல் என்று வந்தால் உங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போராட முன்­னிற்­ப­வர்­க­ளுக்கே வாக்கு அளி­யுங்கள் என்று. அப்­போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்­ட­மாற்­றாகக் கோரியே கொடைகள் தரப்­பட்­டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார்.

கேள்வி: 13ஆவது அர­சியல் திருத்­தச்­சட்­டத்தில் உள்ள  அதி­காரப் பகிர்வு வடக்­குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனா­தி­பதி இந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் அண்­மையில் கூறி­யுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அதைத் தீர்­மா­னிப்­பது அவர் அல்ல. எமது மக்­களே! அவரைப் பத­விக்குக் கொண்­டு­வர நாங்கள் 2014இல்,  2015இல் பாடு­பட்­டது அவர் எங்­க­ளுடன் சேர்ந்து பேசி எமது அர­சியல் உரி­மை­களைப் பெற்றுத் தருவார் என்று தான். எம்­முடன் பேசித்தான் இந்த முடிவை எடுத்­தாரா அல்­லது அடி­வ­ரு­டி­களின் பேச்சைக் கேட்டு இவ்­வாறு கூறி­யுள்­ளாரா?

13ஆவது திருத்தச் சட்டம் 1987இல் வரும்­போதே இரு நாட்­டாரும் இணங்கிக் கொண்ட பல விட­யங்­களை அப்­போ­தைய இலங்கை அர­சாங்கம் முக்­கி­ய­மாக ஜனா­தி­பதி ஜய­வர்­தன எமது நாட்­டிற்குள் வர விட­வில்லை. அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜய­வர்­த­னாவைத் தெரிந்த எனது நண்பர் ஒருவர் நரியின் மறு­பி­றப்பு என்று அவரை வர்­ணிப்பார். 20ஆம் நூற்­றாண்டின் நரி  (20th Century Fox) என்று வெளிப்­ப­டை­யா­கவே அக்­கா­லத்தில் அவர் அழைக்­கப்­பட்டார்.

கிட்­டத்­தட்ட இந்­தி­யாவின் மாகாண அர­சு­களின் அதி­கா­ரங்கள் இலங்­கையின் வட­கிழக்கு மாகாண சபைக்கு வழங்க வேண்டும் என்றே அப்­போ­தைய கருத்துப் பரி­மாற்­றத்தின் போது முடிவு எடுக்­கப்­பட்­டது. அது நடக்­க­வில்லை. அத­னால்தான் 28.10.87ஆம் திக­தி­யன்று தமிழ்த்­த­லை­வர்கள்  அமிர்­த­லிங்­கம், சிவ­சி­தம்­பரம் மற்றும் சம்­பந்தன் ஆகியோர் பாரதப் பிர­தமர் ஸ்ரீ ராஜீவ்­காந்திக்கு எமக்­குத்­த­ரு­வ­தாகக் கூறிய அதி­கா­ரங்கள் தரப்­ப­ட­வில்லை என்ற பாணியில் ஒரு­மித்து கடித மொன்றை எழுதி இருந்­தார்கள். ஜய­வர்­த­னாவின் நரிப்­புத்­தியே வென்­றது. ராஜீவால் கிழ­வ­ருடன் போட்டி போட முடி­ய­வில்லை. இப்­போது கிடைப்­பதை எடுப்போம் பின்னர் பார்ப்போம் என்று இருந்து விட்டார் ராஜீவ்­காந்தி. ஆகவே ஜனா­தி­பதி சிறி­சேன கூறு­வது போல் அதி­கா­ரங்கள் போது­மா­ன­வரை பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வில்லை. 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் ஏற்­பு­டைத்­தாக்­கி­ய­மையால் எமக்­கெனக் கிடைக்­க­விருந்த அதி­காரப் பகிர்வு கடைத் தெரு­வுக்கு இழுத்து வரப்­பட்டு அடுத்த மாகாணம் அதைக் கேட்க வில்­லை. நீயேன் கேட்­கிறாய்? போன்ற கேள்­வி­களால் எம்­ம­வரின் குரல்கள் அடக்­கப்­பட்­டன.

பேரா­சி­ரியர் பீரிஸ்  (அவர் மீது எங்­க­ளுக்கு மரி­யாதை இருந்த காலத்தில்) கூறினார் - ஒரு கையால் தந்து மறு­கையால் திரும்ப வாங்கும் சட்­டமே 13ஆவது திருத்­தச்­சட்டம் என்று. முன்­னைய கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஒருவர் கூறினார் இந்தச் சட்­டத்தின் கீழ் மல­ச­ல­கூடம் கழு­வு­ப­வரைக் கூட நிய­மிக்க எனக்கு உரித்­தில்லை  என்று.

இவற்­றிற்கு மேல­தி­க­மாக வேறு சில முக்­கி­ய­மான விட­யங்­களை ஜனா­தி­பதி மறந்து விட்டார் போல் தெரி­கின்­றது. சில வரு­டங்­க­ளுக்கு முன் அனு­ரா­த­பு­ரத்தில் என்­னையும் உள்­ள­டக்­கிய ஒன்­பது முத­ல­மைச்­சர்­களும் அவரைச் சந்­தித்­த­போது மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களின் குறை­பாடுகள் பற்றி விலா­வா­ரி­யாக அவ­ருக்கு எமது முத­ல­மைச்­சர்கள் அனை­வ­ராலும் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது ஆத­ர­வாளர் ஆகிய  பேஷல ஜய­ரட்ன (அப்­போ­தைய வட­மத்­திய மாகாண முத­ல­மைச்சர்) ஒரு மாகா­ணத்தை ஆளும் சகல அதி­கா­ரங்­களும் எமக்கு வழங்­கப்­பட வேண்டும். இது­வ­ரையில் அவ்­வாறு வழங்­கப்­ப­ட­வில்லை. மத்­தியின் உள்­ளீ­டலே அதிகம். ஆனால் சமஷ்டி வேண்டாம் என்றார். அது­பற்றிப் பார்ப்­ப­தாகக் கூறினார் ஜனா­தி­பதி. குடி­காரன் பேச்சுப் போல் அது மறக்­கப்­பட்­டு­விட்­டது. பேஷல­வுக்கு நான் பின்னர் கூறினேன் சமஷ்டி இல்­லாமல் உங்­க­ளுக்குத் தரப்­படும் மாகாண உரித்­துக்­களை எவ்­வாறு நிரந்­த­ர­மாக்கப் போகின்­றீர்கள்? தரப்­ப­டு­வ­ன­வற்றை ஒற்­றை­யாட்­சியின் கீழ் திரும்பப் பெற­லாமே? என்றேன். அதற்கு அவர் அது­பற்றி எனக்குத் தெரி­யாது. சமஷ்டி வேண்டாம். முழு அதி­காரப் பகிர்வும் வேண்டும் என்றார். சமஷ்டி என்ற சொல்லை உங்கள் தலை­வர்கள் தகாத வார்த்தை ஆக்கி விட்­டார்கள் என்று கூறி­விட்டு அங்­கி­ருந்து அகன்று விட்டேன். 

13ஆவது திருத்தச் சட்­டத்தால் 1987இல் தந்­த­வற்றைப் பற்றி ஜனா­தி­பதி கூறு­கிறார். அங்கு தரப்­பட்ட எத்­தனை அதி­கா­ரங்கள் தற்­போது இல்லை என்­பது பற்றித் தெரி­யாமல் தான் அவ்­வாறு கூறு­கின்­றாரா அல்­லது தெரிந்தும் தமிழ் மக்­களை வாங்க முடியும் என்ற எண்­ணத்தில் இவ்­வாறு கூறி­யுள்­ளாரா?

உதா­ர­ணத்­திற்கு வட­கி­ழக்கு தமிழ் பேசும் மக்­களின் பாரம்­ப­ரிய வாழிடம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதனை அவர் இன்றும் ஏற்­கின்­றாரா? அப்­ப­டி­யென்றால் எங்­க­ளிடம் கேட்­காமல் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் சிங்­கள மக்­களைப் பெரு­வா­ரி­யாக இறக்க எத்­த­னிப்­பது ஏன்? மேலும் குறித்த சட்டம் மூலம் வட­கி­ழக்கு இணைப்பு கிடைத்­தது. சுமார் 18 வரு­டங்கள் அது எமது அர­சியல் யாப்பில் இடம்­பெற்­றதன் பின்­னர், (தன் ஒப்­பு­தல்­படி) கட்சி அர­சியல் ரீதி­யாக சிந்­திக்கும் ஒரு பிர­தம நீதி­ய­ர­ச­ராலும் அவர் சொல் கேட்கும் நீதி­ய­ர­சர்­க­ளாலும் அந்த இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டது. யாத்த நடைப்­ப­டி­முறை சரி­யில்லை என்றே துண்­டிக்­கப்­பட்­டது. சரி­யான முறையில் குறித்த இணைப்பை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­னவா? இல்லை. மாறாக அவ­சர அவ­ச­ர­மாக வட­மா­கா­ணத்­திற்கும் கிழக்கு மாகா­ணத்­திற்­கு­மி­டையில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை உரு­வாக்கி வந்­தார்கள் அர­சாங்­கத்­தினர். கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய் போன்ற கிரா­மங்­களைச் சுற்­றிய பிர­தே­சங்­களில் சிங்­கள குடி­யேற்றம் இந்த நிமி­டத்­திலும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதா­வது இரு மாகா­ணங்­க­ளுக்கும் இடையில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை இருத்­தி­விட்டு மத்­தியில் சிங்­க­ள­வர்கள் வாழ்­கின்­றார்­களே வடக்­கையும் கிழக்­கையும் எவ்­வாறு இணைப்­பது என்று கேட்­ப­தற்­காக அவ­சர அவ­ச­ர­மாக ஜனா­தி­ப­தியின் ஆளு­மைக்கு உட்­பட்ட மகா­வலி அதி­கார சபை­யி­னதும், இரா­ணு­வத்­தி­ன­ரதும்,  வெல­வெ­லத்துப் பயந்து போயி­ருக்கும் மாகாணத் தமிழ் அலு­வ­ல­ரதும் அனு­ச­ர­ணையின் பேரில் இது நடை­பெற்று வரு­கின்­றது. தக்க கருத்து வெளியிட்டால் கரும்­வேலக் காட்­டிற்கு மாற்­றி­வி­டு­வார்கள் என்ற பயம் இந்தத் தமிழ் அலு­வ­லர்­க­ளுக்கு என்றும் இருந்து வரு­கின்­றது போலும்! 

அடுத்து 1992இல் அரச அதிபர், மாவட்டச் செயலர், கிராம சேவை­யாளர் போன்­ற­வர்­களின் மேல் இருந்த மாகா­ணங்­களின் அதி­காரம் நீக்­கப்­பட்­டது. அவர்கள் இப்­பொ­ழுது மத்­தியின் அதி­கா­ரத்தின் கீழ் வரு­கின்­றார்கள். ஆகவே சமாந்­தி­ர­மான இரண்டு அதி­கார மையங்கள் மாகாண மட்­டத்தில் ஆட்­சி­யோட்­சு­வது அவ­ருக்குத் தெரி­யாதா? மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­க­ளுக்குள் நிறை­வேற்று அதி­காரம் அற்ற அர­சி­யல்­வா­தி­களைக் கொண்டு வந்து இணைத்­த­லை­வர்கள் ஆக்­கி­யுள்ளார். நிறை­வேற்று அதி­காரம் என்­பது மாகாண ரீதி­யாக முத­ல­மைச்­ச­ரி­டத்­திலும் மத்­தியின் சார்­பாக சிரேஷ்ட  அமைச்சர் ஒருவர் வசமே இருக்­கின்­றது. சட்­ட­வாக்க உரிமை கொண்­ட­வர்கள் சபையில் இருந்து பேச மட்­டுமே முடியும். இணைத்­த­லை­வர்கள் ஆக முடி­யாது அவர்­களால். ஆனால் ஆக்­கி­யுள்ளார் எமது கனம் பொருந்­திய ஜனா­தி­பதி. 

பிர­தம செய­லாளர் மாகாணப் பொதுச் சேவை அலு­வலர் சேவைக்குள் அடங்­காது மத்­தியின் கீழ் வரு­வது அவ­ருக்குத் தெரி­யாதா? 

எனக்குத் தேவை­யான ஒரு செய­லா­ளரை எனது அமைச்­சுக்கு நான் தேர்ந்­தெ­டுக்க ஒரு வரு­டத்­திற்கு மேலாகப் போராட வேண்­டி­யி­ருந்­தது. மத்­திக்கும் மாகாண மட்ட அலு­வ­லர்­க­ளுக்கும் இடையில் இருக்கும் நெருங்­கிய உறவே இதற்குக் காரணம். மத்­திக்­கி­ருக்கும் அதி­கா­ரத்தில் மதி மயங்­கி­ய­வர்­களே எமது மாகாண மட்ட அதி­கா­ரிகள். அவ்­வ­ள­வுக்கும் நான் கோரிய அலு­வலர் முழு இலங்கை மட்­டத்தில் நிர்­வாக சேவைப் பரீட்­சையில் 1984இல் சித்தி அடைந்த ஒருவர். வட­மா­கா­ணத்தில் இன்று இருக்கும் அத்­தனை சிரேஷ்ட அலு­வ­லர்­களும் போது­மான அறி­விப்பு பரீட்­சார்த்­தி­க­ளுக்குக் கொடுக்­காது 1991இல் அல்­லது 1992இல் போரின் போது வைக்­கப்­பட்ட பரீட்­சையில் மாகாண மட்­டத்தில் சித்தி அடைந்து வந்­த­வர்­களே. மாகா­ண­மட்­டத்தில் இருக்கும் மத்­தியின் அதி­கா­ரங்­க­ளையும் செல்­வாக்­கையும் புரிய வைக்­கவே இதைக் கூறு­கின்றேன். 

பெரு­ம­ளவில் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளித்­தி­ருக்­கின்றோம் என்று கூறும்­போது ஜனா­தி­பதி தனது நாக்கைக் கொடுப்­புக்குள் மடித்து வைத்­துக்­கொண்டு கூறி­யி­ருக்க வேண்டும்! 

வடக்­கிலும் கிழக்­கிலும் சாதா­ரண மக்­களின் கோரிக்கை சிறந்த பொரு­ளா­தார நிலை­மையே அன்றி அரச அதி­கா­ரங்கள் அல்ல என்ற கருத்­துப்­பட ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு அறிக்கை விட்­டுள்­ளது. போரின் பின்­ன­ரான நிலையில் எமது மக்கள் அன்­றாட தேவை­க­ளுக்குத் திண்­டாட வேண்­டி­யுள்­ளது என்­பது உண்மை. வேலை­யில்லாத் திண்­டாட்டம் ஒரு புறம் போதிய முத­லீ­டுகள் வராமை மறு­புறம் செய்­வ­தாகக் கூறப்­படும் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களின் தாமதம் கடன் நிறு­வ­னங்­களின் கசப்­பான காரி­யங்கள், இரா­ணு­வத்­தி­னரின் உள்­ளீ­டுகள் என்று பல­தாலும் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள் அல்­லது பாதிக்க வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். தர­வேண்­டி­யதைத் தராது வைத்து தாம­தித்துத் தந்தால் தரங்­கெட்ட மக்கள் மறந்து விடு­வார்கள் தமது உரி­மை­களை என்ற எண்­ணத்தில் ஜனா­தி­பதி இவ்­வாறு கூறி­னாரோ தெரி­ய­வில்லை. எமது மக்­க­ளுக்கு வேண்­டி­யி­ருந்­தது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியே அன்றி அர­சியல் ரீதி­யான அதி­கா­ரங்கள் அன்று என்று ஜனா­தி­பதி கூறும்­போது 2013 செப்­ரெம்­பரில் வட­மா­காண முத­ல­மைச்­ச­ராகப் போட்டி இட்­ட­வ­ருக்கு எவ்­வாறு 133000க்கு மேற்­பட்ட மக்கள் வாக்­குகள் கிடைத்­தன என்று சிந்­திக்க வேண்டும். அப்­போது ஜனா­தி­பதி அக்­கா­லத்­தைய அர­சாங்­கத்தில் முக்­கிய அமைச்­ச­ராக இருந்­தவர். ஜனா­தி­பதி மகிந்த எவ்­வா­றான பொரு­ளா­தார குறை­ய­கற்றும் ஈகையில் ஈடு­பட்­டி­ருந்தார் என்று அவ­ருக்குந் தெரிந்­தி­ருந்­தது. இரா­ணு­வத்­தினர் ஊடாக அள்ளி அள்ளிக் கொடுத்­தாரே மகிந்த! ஏன் மக்கள் அவரின் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை? மக்­க­ளுக்குத் தேவைகள் இருப்­பது உண்மை தான். ஆனால் எமது தமிழ் மக்­களை விலை கொடுத்து வாங்­கி­விட்டு அதி­கா­ரங்­களைப் பகி­ராமல் இருக்க முடியும் என்று ஜனா­தி­பதி நினைத்தால் அவரின் அர­சியல் அறிவு பற்றி சந்­தேகம் எழு­வது இயல்பே.

இப்­பொ­ழுதும் நான் என் மக்­க­ளுக்குக் கூறு­வது அர­சாங்கம் தரும் கொடைகள் அனைத்­தையும் ஏற்றுக் கொள்­ளுங்கள். பொரு­ளா­தார சலு­கை­களை தாரா­ள­மாக ஏற்றுக் கொள்­ளுங்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் உங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போராட முன்­னிற்­ப­வர்­க­ளுக்கே வாக்கு அளி­யுங்கள் என்று. அப்­போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்­ட­மாற்­றாகக் கோரியே கொடைகள் தரப்­பட்­டன. வாக்­க­ளிக்­கா­விடில் அது துரோகம் அல்­லவா? என்று கேட்­பார்கள். அதற்கு நான் கூறு­வது அர­சாங்­கமும் அர­சாங்­கத்­துடன் இணைந்த தமிழ் மக்­களும் போரின் போது உங்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திய அழி­வு­க­ளுக்கும், அல்­லல்­க­ளுக்கும், அவ­லங்­க­ளுக்கும் கோடி கோடி­யாக நட்­ட­ஈடு உங்­க­ளுக்குத் தர வேண்டும். தமிழ் மக்­களின் நேர்­மை­யான, நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­களை உதா­சீனம் செய்தே உங்கள் அனை­வ­ரையும் இவ்­வா­றான இக்­கட்­டான நிலைக்குத் தள்­ளி­னார்கள். இப்­போது வாக்குக் கேட்டு கொடைகள் தரு­வது எவ்­வாறு நியா­ய­மாகும்? எவ்­வாறு அற­மாகும்? பிள்­ளை­யையுங் கிள்ளித் தொட்­டி­லையும் ஆட்டப் பார்க்­கின்­றார்கள் அல்­லவா? உங்­க­ளுக்­கு­ரிய நட்ட ஈட்டை கூடு­மா­ன­வரை வருத்தி அர­சாங்­கத்­திடம் இருந்தும் அரச அடி­வ­ரு­டி­க­ளிடம் இருந்தும் இவ்­வா­றான கொடைகள் மூலம் பெற்றுக் கொள்­ளுங்கள். அவர்கள் உங்கள் கட­னையே திருப்பி அடைக்­கின்­றார்கள். உங்­க­ளுக்­கென்று எதையும் புதி­தாகச் செய்ய முன்­வ­ர­வில்லை. உங்­களை நீங்­களே ஆள சட்­டத்தில் இட­ம­ளிக்­க­வில்லை. உங்­க­ளுக்குத் தேவை­யான அர­சியல், பொரு­ளா­தார, கல்வி, சமூக புன­ர­மைப்­புக்­களை உங்­களைக் கேட்டு சட்­டப்­படி நகர்த்த முன்­வ­ர­வில்லை. அவர்கள் தரு­வதை அவர்­க­ளிடம் இருந்து எடுத்து விட்டு தமி­ழர்தம் உரி­மை­க­ளுக்­காகப் போராடும் தகுந்­த­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது பிழை­யல்ல என்று கூறுவேன். ஆனால் அண்மைக் காலங்­களில் தகுந்­த­வர்கள் என்று நாம் நம்­பி­ய­வர்கள் கூட தரங்­கெட்­ட­வர்­க­ளாக மாறி வரு­வது தமி­ழர்தம் தலை­விதி. அதை விரைவில் மாற்றி அமைப்போம். 

இவ்­வா­றான பொரு­ளா­தார நிலைமை சீர்­தி­ருத்­தத்தை எம் மக்கள் தமக்­கெ­னத்­தாமே தீர்­மா­னித்து செய்ய வேண்டுமே ஒழிய மத்தியில் உள்ளோர் இவர்களுக்குத் தேவை இதுதான் என்று தாமே முடிவெடுத்து செய்வதற்கு நாம் ஒன்றும் அவர்தம் இனத்தையோ, மதத்தையோ, மாகாணத்தையோ சார்ந்தவர்கள் அல்ல. நாம் தமிழர்கள். நாம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள். எமக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. தாயகம் உண்டு, தனித்துவம் உண்டு. அவற்றை மதித்து, மறுதலிக்காமல், மயக்க வார்த்தைகளைப் பாவிக்காமல் உரிய உரித்துக்கள் மூலம் தந்தாலன்றி மக்கள் மீண்டும் மீண்டும் தருவதை எடுத்துக் கொண்டு தம்மைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய தமிழ் பிரதிநிதிகளுக்கே வாக்களிப்பர் எங்கள் மக்கள். இதனால் நான் என் நண்பர்கள் டக்ளஸ் தேவானந்தா, தம்பி அங்கஜன், திருமதி மகேஸ்வரன் போன்றவர்களைக் குறை கூறவரவில்லை. அவர்களால் போகக் கூடிய மட்டம் பொருளாதார அபிவிருத்தி பெறுவது வரைக்கும் மட்டுமே என்று கூற வருகின்றேன். அவற்றை எடுத்துக் கொடுங்கள் எம் மக்களுக்கு என்று தான் நான் அவர்களுக்குக் கூறுவேன். ஆனால் எமது மக்கள் தமது நிரந்தர தேவையை உணர்ந்துள்ளார்கள். அதுதான் முற்றுமுழுதான வடகிழக்கு இணைந்த சகல மட்ட அதிகாரப்பரவல். 13ஆவது திருத்தச் சட்டமல்ல!