பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் நாளை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

வாகன நெரிசல் மற்றும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 பஸ்கள் வீதியின் இடது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.